உறங்கும் வேளையில் உழன்ற சிந்தனை ! -------------------------------------------------------------------- உறங்கிட...
உறங்கும் வேளையில் உழன்ற சிந்தனை !
--------------------------------------------------------------------
உறங்கிட சென்றேன் ....விழிகளை மூடிய அடுத்த நொடியே உள்ளத்தின் கதவுகள் திறந்தன . மனதில் ஓடிய எண்ணங்கள் சற்று நெருடலாகவும் அதே நேரத்தில் சிந்திக்கவும் வைத்தது.சிதறிய சிந்தனைகள் சில பதராக இருந்தாலும் சிலவற்றை பதிவிட தோன்றியத்தின் விளைவே இந்த பதிவு .
தற்போது நாட்டில் தான் எத்தனை பிரச்சினைகள் ...? எவ்வளவு தடைகள் ? எப்படியெல்லாம் குழப்பநிலைகள் ? காற்றில் பறக்கும் பஞ்சாக , சமூகத்தில் பறந்து திரியும் பல்வேறு சூழல்கள், ஒலிக்கும் பலரின் குரல்கள், ஓலமிடும் சப்தங்கள் ...?ஏழையின் ஏக்கம் நிறைந்த மூச்சுக் காற்று , உச்சத்தில் இருப்போரின் ஆட்டம் பாட்டங்கள் , சாதிமத வெறியாட்டங்கள் , உலகத்தில் இருக்க
இடமே இல்லாத நிலையிலும் இட ஒதுக்கீடு பிரச்சினைகள் , அரசியல் எனும் பெயரில் நிகழும் அவலங்கள் , ஆசிரியர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்களின் போராட்டங்கள் , தீர்க்கப்படாத நதிநீர் பங்கீடுகள் , அணைக் கட்டுவதில் எழும் அச்சங்கள் , கல்விக் கொள்கையில் வரும் சில மாற்றங்களும் அதன் நன்மை தீமைகள் ,பொழியாத வானத்தால் வரவுள்ள குடிநீர் தட்டுப்பாடு மற்றும் இதற்கிடையே இடைக்கால
நிதி அமைச்சரால் கொண்டுவரப்பட்ட இடைக்கால வரவு செலவு திட்டத்தால் ( பட்ஜெட் ) ஏற்படவுள்ள சாதக பாதகங்கள் , மேலும் அதன் அடிப்படையில் நிகழும் காரசார விவாதங்கள் என பல்வேறு அம்சங்கள் கொண்ட சூழ்நிலை தான் தற்போது ....!

பல நோய்களின் தாக்கத்தால் ஒருவருக்கு ஏற்படும் நிலையில் உள்ளது இந்த சமூகமும் நாடும். இதற்கு மேல் நாம் எதிர்கொள்ளவுள்ள தேர்தல்.ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரும் சிந்திக்க வேண்டிய தருணம் இது .வளரும் சமுதாயமும் , வளர்ச்சி அடைந்த இந்தியாவாக உலகளவில் வளர்ந்து வலிவான வளம்பெற்ற பூமியாகவும் திகழ வேண்டியதை மனதில் கொண்டு அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் . !
பழனி குமார்
02.02.2019
02.02.2019