எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வைகைப்புயல் வடிவேலுவை வாட வைத்த தெனாலிராமன் வரிவிலக்கு விவகாரம்...

வைகைப்புயல் வடிவேலுவை வாட வைத்த தெனாலிராமன் வரிவிலக்கு விவகாரம்

ஆளும்கட்சியின் கோபத்துக்கு ஆளானதால் கடந்த மூன்று வருடங்களாக வீட்டில் உட்கார்ந்திருந்தார் வடிவேலு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்த தெனாலிராமன் படம் நேற்று வெளியானது. அதை ஒட்டி, ஆளும்கட்சிக்கு ஆதரவான தொலைக்காட்சியில் வடிவேலுவின் பேட்டி ஒளிபரப்பானது. இதுநாள்வரை தன்னை தள்ளியே வைத்திருந்தவர்கள், தன்னுடைய பேட்டியை ஒளிபரப்பும் அளவுக்கு இறங்கி வந்ததும் உற்சாகமானார் வடிவேலு. தன் மீதான ஆளும்கட்சியின் கோபம் தீர்ந்துவிட்டது என்று எண்ணி புளகாங்கிதப்பட்டு தனக்கு நெருக்கமான பலருடன் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

வடிவேலுவின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. தெனாலிராமன் படத்துக்கு வரிவிலக்கு கோரி கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வாங்கவே இல்லையாம். சரியானமுறையில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தும், ஏதேதோ காரணங்களைச் சொல்லி விண்ணப்பத்தை வாங்காமலே தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த ஆட்களை திருப்பி அனுப்பி விட்டனராம். இந்த விஷயம் வடிவேலு காதுக்கு வந்ததும் வைகைப்புயல் வாடிப் போய்விட்டாராம்.

நாள் : 21-Apr-14, 9:55 am

மேலே