17 . இதுதான் காதலோ . . .....
17. இதுதான் காதலோ . . .. ?
இதமாகத்தான் இருக்கிறது
இதழ்களுக்கிடையில்
சிறைப்படுகையில்
சில்லென்று ஓருணர்வு
சீறிப்பாய்கிறது அருவியாய்
தேனருந்துகையில் தெவிட்டவில்லை
வேண்டும் வேண்டும் என்றே
ஆசைகள் நீரோட்டமாய்
விரல்நுனி படுகையில் வேர்த்து குளிர்கிறது
நரம்புகள் எல்லாம் நாணி புடைக்கிறது
என்னென்ன மாற்றங்கள் -புதியதோர்
அனுபவம் பூப்படைய செய்கிறது
பசிக்காத வயிறு பார்க்கத்துடிக்கும் கண்கள்
ஏங்கித்திரியும் இதயம் - எங்கெங்கு காணிலும்
எழில் உருவம் - கசப்பு இனிக்கிறது
கார்ப்பு சுவைக்கிறது
காரிருள் வெளிச்சமாய் நெருப்பும் நீராய்
புரியவில்லை எனக்கு
வேதியியல் மாற்றங்களாய் எனக்குள்ளே
ஓ. . . இதுதான் காதலா. . .
காந்த விசைக்கு கட்டுண்ட இரும்பாய்
காதல் ஈர்ப்பில் நான்!
கனவில்
மு.ஏழுமலை
9789913933