எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

22 . கர்ம வீரர் காமராசர் கர்ம வீரரு...

22. கர்ம வீரர் காமராசர்


கர்ம வீரரு தர்ம சீலரு 
காமராசரு - நம்ம காமராசரு
கல்விக்கண்ண திறந்தாரு
மதிய உணவு தந்தாரு 
ஏழைகள் சிரிக்கவே 
இறைவனாய் வந்தாரு - காமராசரு 
நம்ம காமராசரு 

கதரு மேல ஆச வச்சாரு - மக்க 
கஷ்டத்தையெல்லாம் போக்கிவந்தாரு 
நெறைய அணைகளெல்லாம் கட்டிவச்சாரு 
அவரு அன்பால மக்கள ஆண்டாரு
   
படிக்காத மேதை அவரு - பிறர் 
படிக்கவேண்டி பல திட்டம் தந்தாரு
விவசாயத்த காக்கவேணும்னு அப்பவே 
வெவரமாத்தான் சொல்லி வச்சாரு 
கிங் மேக்கரு  கிங் மேக்கரு
காமராசரு -  கருத்த காமராசரு
இவன் 
மு. ஏழுமலை
 




பதிவு : மு ஏழுமலை
நாள் : 6-Mar-19, 9:57 am

மேலே