34 . கன்னித்தாலாட்டு. . . கன்னித்தாய் பாடுகிறேன்...
34. கன்னித்தாலாட்டு. . .
கன்னித்தாய் பாடுகிறேன் தாலாட்டு
கண்மணியே கண்ணுறங்கு அதை கேட்டு
கவலை வேண்டாம் உனக்கிங்கே
உனக்காக இருக்கிறேன் நானிங்கே
மூழ்காமல் முத்தெடுத்தேனே - உன்னை
முழுமனதாய் தத்தெடுத்தேனே
செல்லமே. . . தங்கமே. . கண்ணுறங்கு
என்னுள்ளமே உனக்குத்தான் நீயுறங்கு . . . (கன்னித்தாய்)
மாங்காய் நானும் தின்னவில்லை
மசக்கையில் நானும் இருந்ததில்லை
சாம்பலெல்லாம் ருசித்ததில்லை
பத்தியமேதும் இருந்ததில்லை
பைத்தியமாகி போறேனே நொடியும்
உன்னை காணாவிடில் . .. (கன்னித்தாய் )
வயிற்றில் உன்னை சுமக்கவில்லை
வந்தாயே வசந்தமாய் என்வாழ்வில்
இலையுதிர் காலம் இனியுமில்லை
நீதானே இசையானாய் என்நாவில்
தாயாகி மகிழ்கின்றேன் - உனக்கு
தாலாட்டு பாடுகின்றேன் . . (கன்னித்தாய் )
வசனம்: நீ அம்மான்னு சொல்லயில - நான்
ஆனந்தத்தில் மூழ்குகின்றேன் - உன்
பிஞ்சு விரல் தொடுகையில்
நெஞ்சு குளிர்ந்து மயங்குகின்றேன்
உன்விழியுருட்டி பார்க்கையிலே - நான்
விண்மீனாய் மின்னுகின்றேன் - என்
சொந்தமாக வந்தாயே - வாழ்வில்
சந்தங்களை தந்தாயே
பிள்ளைபெற தகுதியிருந்தும்
தத்தெடுத்தேனே உன்னைத்தானே - உன்ன
பெத்தெடுத்தவ தெருவுல போட்டதால
(பாட்டு)
கன்னித்தாய் ஆனேனே செல்லமே உனக்காக
ஊர்பேச்சு எனக்கெதுக்கு உன்பேச்ச கேட்டபின்னே
தத்தெடுப்பதில் குத்தமில்ல தெரிஞ்சுக்கோங்க
குப்பைவாழ் குழந்தைகளுக்கு வாழ்வுதாங்க .
மு. ஏழுமலை