எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விவசாயி நம் உயிர்நாடி விவசாயி நம் உயிர் நாடி...

       
        விவசாயி நம் உயிர்நாடி

விவசாயி நம் உயிர் நாடி
தினம்தினம் அவனும் போராடி
வீதிக்குச் சென்றான் கூத்தாடி
உயரப் பறக்கும் காற்றாடி – கடன்
அவன் உயிரைக் குடிக்கிறது ஆத்தாடி
பருவம் வந்த பின்னாடி
பயிர்த் தொழில் செய்வான் உழவாடி
வாடும் பயிரைக் கண்டபடி 
உயிரை விட்டான் கடவுளடி
இரும்பு உள்ளம் உள்ளவனடி
துரும்பாய் ஆனான் உழைத்தபடி
போட்டியில் உலகம் ஓடுதடி – அவனை 
பசியில் மட்டும் தேடுதடி
உழுநிலம் எல்லாம் அழிந்தபடி
சாலைகள் எல்லாம் அமையுதடி
வருமானம் எல்லாம் குறைந்ததடி
வறட்சி அவனை வாட்டுதடி
தற்கொலை எல்லாம் பெருகுதடி – இன்று 
தண்ணீரை இரக்கும் நிலை வந்ததடி
விஞ்ஞானம் எல்லாம் வளர்ந்ததடி – ஆனால் 
விவசாயி கவலை தீரவில்லையடி
உயிர் போன பின்னாடி
ஊரே வரும் பெருமைபாடி – என்றும்
விவசாயியே நம் உயிர் நாடி.
                                        வினோத்.செ

பதிவு : வினோத் செ
நாள் : 27-Mar-19, 12:02 pm

மேலே