எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தற்போது மத்திய அரசின் கொள்கை என்னவெனில் , அவர்கள்...

தற்போது மத்திய அரசின் கொள்கை என்னவெனில் ,


அவர்கள் விரும்பும் ஆடையை உடுத்த வேண்டும் 
அவர்கள் பேசும்  மொழியைத்தான் பேச வேண்டும் 
அவர்கள் உணவைத்தான் உண்ணுதல் வேண்டும் 
அவர்கள் கட்டளையை அனைவரும் ஏற்க வேண்டும் 
அவர்கள் மதத்தை மட்டுமே பின்பற்ற வேண்டும் 

இது இந்திய ஒருமைப்பாட்டிற்கே களங்கம் விளைவிக்கும் !மிகவும் ஆபத்தான சிந்தனை இது . தவறான வழிமுறை . தயவுசெய்து அந்த கொள்கையை கைவிடுங்கள் .

இந்தியர்களை போல ஒற்றுமையான சகோதரத்துவம் நிறைந்த செயல்படும் நாடு உலகில் வேறில்லை .அதிலும் தமிழ்நாட்டைப் போல் அமைதியும் , அன்பும் ,மாண்பும் , பண்பும் , சிறந்த மனிதர்களும் கொண்ட மாநிலம் வேறில்லை . அரசியலில் மாறுபாடுகள் இருந்தாலும் , உள்ளத்தால் ஒன்றிணைந்த உயர்ந்த எண்ணம் பொங்கி வழிகின்ற மக்கள் வாழும் மாநிலம் தமிழ்நாடு .மொழித் திணிப்பு என்பது ஒரு குடம் பாலில் ஒருத்துளி விஷத்தை கலப்பது போன்றது . 

அதை செய்திட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் .
நாம் அனைவரும் இந்தியர் என்ற எண்ணத்தில் எந்தவித மாற்றுக் கருத்து இல்லாதவர்கள் தமிழர்கள் . 


       பழனி குமார்                        நாள் : 2-Jun-19, 10:04 pm

மேலே