எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இந்தக் காலத்தில் என்னதான் பல அடுக்குமாடி குடியிருப்புகள் நவீன...


இந்தக் காலத்தில் என்னதான் பல அடுக்குமாடி குடியிருப்புகள் நவீன முறையில் கட்டினாலும்,  இது போன்ற கிராமத்து வீடுகள் போல நிச்சயம் வராது. ​இதன் அமைப்பும் அழகும்​ , மன நிறைவு​டன் ​ உற்சாகமும் ​கிடைக்கும் ​. ​கிராமம் என்றாலே வெறுத்தவர்களும் , முகம் சுளித்தவர்களும் இன்று அதே கிராமத்தை நோக்கி படையெடுப்பது தொடர்கிறது . நகரத்தின் சூழலும் மாசும் அவர்களை ஒதுங்கி செல்ல வைக்கிறது .​ 


விசாலமான வீதியில் வீடு அமைந்திருந்தாலும் , அதிநவீன அடுக்குமாடியில் இருந்தாலும் அடுத்த வீட்டுக்காரரைப் பற்றி ஒன்றும் தெரியாது . அவர்களுக்குள் பேசிக்கொள்வதும் கிடையாது . ஏதோ பகைவர்கள் போலத்தான் வாழ்கிறார்கள் . 

ஆனால் கிராமத்தில் யாருக்கேனும் ஒரு பிரச்சினை ஏற்பட்டாலும் , நல்ல விஷயங்கள் என்றாலும் ஊரே ஒன்று கூடும் . அவர்களுக்குள் உள்ள அன்பின் ஆழத்தை அனைவரும் அறிய முடியும் . 

இதுபோன்ற இல்லங்களில் தான் இதயங்கள் நெருக்கமாக இருக்கும் . ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து ஊர் பிரச்சினைகளையும் , உலக செய்திகளையும் அலசுவர் . ஒருவருக்கொருவர் உதவிடும் என்ற எண்ணம் எப்போதும் அவர்கள் இதயத்தில் நிலையாய் இருக்கும் . இதெல்லாம் அந்தக் காலத்தில் நானே நேரில் கண்ட அனுபவமும் உண்டு . சாதி மதங்களை கடந்து சகோதர உணர்வுடன் பழகுவர் . குடும்பமே ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவர் . 

எழில்மிகு கிராமத்து சூழலும் ,ஏற்றமிகு எண்ணங்களை நெஞ்சில் ஏற்படுத்தும் . அவர்களுக்குள் ஒரு கட்டுப்பாடு இருக்கும் . போட்டி பொறாமை இருக்காது அவர்களுக்குள் . மொத்தத்தில் அனைவரும் ஆனந்தமாக வாழ்கின்ற சூழ்நிலை அமைந்திடும் . ( ஆனால் இது போன்ற நிலையின்றும் அங்கு நிலவுகிறாதா என்று தெரியவில்லை ). ஆனால் நகர வாழ்க்கை இதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒன்று என்பதற்கு மாற்றுக் கருத்து இருக்காது என்றே நம்புகிறேன் .        

பழனி குமார்               

நாள் : 13-Jul-19, 8:22 am

மேலே