கருவறை வாழ்த்து உன் தாயின் வயிற்றில் தூங்கினாய் உணர்வுடன்!...
கருவறை வாழ்த்து
உன் தாயின் வயிற்றில்
தூங்கினாய் உணர்வுடன்!
இன்றோ பூமித்தாயின் வயிற்றில்
தூங்குகிறாய் வலியுடன்!
அன்றோ உன் தாய்க் உன்னுயிர்க்கு
உயிர் சேர்த்தாள்!
இன்றோ உன்னுயிர்க்கு உயிர்
சேர்ப்பாள் பூமித் தாயவள்!
ஆராரோ! ஆரிராரோ! கண்ணுறங்கு
என் மகனே!
ஊராரும் வாய்பிளக்க மீண்டும்
நீ பிறந்திடுவாய்!
நாமணக்க தமிழ் பேசி
உலகத்தினை வென்றிடுவாய்!