எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இளமை ஒருநாள் முடிந்து போகும் அழகும் நம்மை கடந்து...

இளமை ஒருநாள் முடிந்து போகும் 
அழகும் நம்மை கடந்து போகும் 
காமம் இடையில் பறந்து போகும் 
ஆட்டம் பாட்டம் அடங்கி போகும் 
பொறாமை ஆணவம் அழிந்து போகும் 
சண்டைகள் காதலின் சங்கீதமாகும் 
பொய்கள் கண்ணீரில் கரைந்து போகும்
சொந்தமெல்லாம் தூரமாகும் 
பார்வை குன்றி மங்கி போகும் 
தசைகள் சுருங்கி தொங்கி போகும் 
அன்பு ஒன்றே ஆறுதலாகும் 
காலபோக்கில் ஒரு காதல் பயணம் 
மரணம் ஒன்றே முடிவு தரணும் 
மரணம் வரையில் நீ என் துணையாய் வரணும்!

பதிவு : Suresh pandi
நாள் : 7-Dec-19, 4:06 pm

மேலே