எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பெண்ணை பெற்றவள் பிறந்து விட்டாய் பெண்ணாக உன்னை ஒரு...

        பெண்ணை பெற்றவள்

பிறந்து விட்டாய் பெண்ணாக உன்னை ஒரு நாள் வழி அனுப்பி வைக்க வேண்டுமடி! 
என் நெஞ்சமெல்லாம் துடிக்குதடி! நான் புகுந்த வீட்டில் அனுபவித்தவாறே நீயும் ஆகப்போகிறாய் என்று
 உன்னை கண்கலங்காமல் மகாராணியாக வளர்க்க ஆசையடி! 
உன் ஆசை எல்லாம் நிறைவேற்றி உன்னை சிரிக்க வைக்க ஆசையடி! 
என் அன்பு மகளே உன் புகுந்த வீட்டில் உன்னை கண்கலங்காமல் பார்த்துக்கொள்ள நான் எவ்வளவு சீர் கொடுப்பது என்று தெரியவில்லை
 நான் உன்மேல் வைத்த அன்பை அங்கு எவரும் கொடுப்பார்களா உன்னை கண்கலங்காமல் பார்த்துக்கொள்வார்களா என்று ஆயிரம் யோசனைகள் என்னை வதைக்கிறதே. 

பதிவு : Banupriya
நாள் : 6-Jan-20, 11:49 pm

மேலே