மாமியார் எண்ணம் என்னவென்று சொல்வதம்மா உங்கள் பெருந்தன்மையை. மகனை...
மாமியார் எண்ணம் என்னவென்று சொல்வதம்மா உங்கள் பெருந்தன்மையை. மகனை பெற்றுவிட்டோம் கைநிறைய சம்பளம் அப்டின்னு பொண்ணு பாப்பிங்க. பெண் தேடாத இடம் இருக்காது உங்கள் வசதிக்கு ஏத்தமாதிரி. ஒருவழியாக உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிய குடும்பம் கிடைத்தால் திருமணம் முடித்து வரதட்சணை வாங்கி அந்த பெண்ணை சேர்த்து கொள்வீர்கள். எவ்வளவு செய்தாலும் குறை கண்டுபிடிப்பதில் நீங்கள் மன்னர்கள். உங்களுக்கு உங்கள் கணவன் நீங்கள் பெற்ற மகன் வரப்போகிற பேரன் பேத்திகள் இவர்கள் அனைவரும் உங்களுக்கு சாதகமாக வைத்துக்கொள்ள ஆசை படுவீர்கள். அனால் வீட்டிற்கு வந்த மருமகளோ உங்கள் வீட்டில் உள்ள சமையலறை மட்டும் தான் உலகம் என்று வாழவேண்டும். ஒரு பெண் தன் தாய் வீட்டிற்கு சென்றால் உடனே வரவேண்டும். அம்மா அப்பாவை பார்க்க சென்றால் கூட ஆயிரம் பிரச்சனை இழுத்து கணவன் மனைவிக்குள் சண்டை மூட்டுவது. ஒன்று மட்டும் உங்கள் மனதில் வைத்து யோசித்து பாருங்கள். நீங்கள் பெற்ற மகன் உங்கள் கூடவே இருக்கனும் என்று ஆசை படுகிறீர்களே பெண்களை பெற்ற தாய் தந்தை மனது மட்டும் கல்லில் செய்ததா. பிறந்த வீட்டில் ராணி மாதிரி வளர்த்த பெற்றவர்களை விட்டு உங்கள் வீட்டில் வாழ வந்த பெண்ணிடம் உங்கள் ஆணவத்தை காட்டாதீர்கள். நீங்கள் உங்கள் மகனை எப்படி வலியோடு பெற்று எடுத்து வளர்த்தீர்களோ அதே மாதிரி தான் உங்கள் வீட்டிற்கு வந்த மருமகளையும் அவள் தாய் பெற்று எடுத்திருப்பாள்.