மகாத்மா காந்தி கவிதை: அகதியாய் கொந்தளித்தோம் "அ" அகிம்சை...
மகாத்மா காந்தி கவிதை:
அகதியாய் கொந்தளித்தோம்
"அ" அகிம்சை என
கைபிடித்து சொல்லி தந்தாய்
ஆயுதம் இல்லாது உன் போதனை
புது கீதையை போன்றது
சத்தியம் உயிர் பெற்ற போது
காந்தி உருவை கண்டேன்
உனக்கே ஏற்பட்ட சோதனை
அதனால் இயற்றப்பட்ட சாதனை
"சத்திய சோதனை "
விடுதலை கேட்டபோது
விடுகதையாய் அமைந்தாய்
வெள்ளையனுக்கும்
ஒரு கன்னத்தில் அரைந்தால்
மறு கன்னத்தை காண்பி
என புதிர் போட்டாய்
விடை தெரியாமல் தடுமாறினான்
வெள்ளையன்
தேசப்பிதாவாய்
உன் மகன்களுக்கும் மகள்களுக்கும்
சுதந்திரம் என்னும் சொத்தை
தாரை வார்த்தாய்
இந்த செயல் உன் ஆத்மாவை
"மகாத்மா" வாக்கியது
சாதாரண ஆத்மாவான எனக்கு
என் சுதந்திர மூச்சை சுவாப்பதே
உன் புகழை பாடும் தேசிய கீதம்
ஜெய்ஹிந்த்!
- Written By Srikanth Lawrence