எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

. மகாலெட்சுமி( பாடல்) ௵தேவி வந்துவிடு - என்...

.             மகாலெட்சுமி( பாடல்)


௵தேவி வந்துவிடு -  என் சிந்தையெல்லாம் உன்
நினைவு,
சீக்கரம் வந்து நீயும்
என் சிரசோடு கலந்துவிடு.(௵தேவி)
கண்ணீரண்டும் தேடுதம்மா
உன் கருணைமுகம் காட்டிவிடு,
உன் பொன்னுருவம் காண்பதற்கு,
இந்த பூவுலகில் பிறந்தேனே..
( ௵தேவி)
உலகளந்த பரந்தாமா ,
உன் திருவடியை நான் தொழுது ,
அந்த திருமகளைக் காண்பதற்கு,
உன் திருநாமம் சொல்லுகிறேன்,
ஓம் நமோ நாராயணா,
ஓம் நமோநாராயணா . (௵தேவி)
உன் நெஞ்சில் குடிகொண்ட,
உன் தேவிமுகம் திருப்பிவிடு,
இந்த ஏழைமுகம் பார்ப்பதற்கு,
நான் ஏகாந்தம் அடைவதற்கு( ௵தேவி) 

பதிவு : Ahila
நாள் : 24-Feb-20, 11:48 am

மேலே