எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒருவர் பிறப்பதும் பிறந்தவர் வாழ்வதும் வாழ்பவர் மறைவதும் இயற்கை......

ஒருவர் பிறப்பதும்
பிறந்தவர் வாழ்வதும்
வாழ்பவர் மறைவதும் இயற்கை...

இவ்வுலகில் வாழும் காலத்தில்
அறியப்படாமல் 
அதிகம் பேசப்படாமல் ஈர்க்கப்படாமல்
இருப்பவர்களே அதிகம்...
ஆனால் எவரொருவர் வாழ்ந்து மறைந்தவுடன் அதிகமாக அவரைப்பற்றி பேசுவதும் புகழ்வதும்
அவரின் இழப்பால் மனதளவில் பாதிக்கப்படுகின்ற கவலைப்படுகின்ற நிலை உருவாகுமானால் அவர் வாழ்ந்தது தான் ,

உண்மையான வாழ்வு
நிறைவான வாழ்வு
மாசில்லா வாழ்வு
அர்த்தமுள்ள வாழ்வு ...
அந்த மாமனிதர்களை மண்ணில் நமக்கு அடையாளம் காட்டுவதும் ,
மக்களின் மனதில் இடம் பிடிக்கும் அளவிற்குபோற்றப்படுகின்ற ஒரு நிகழ்வு எதுவெனில் 

அது அவரின் இறுதி ஊர்வலம் தான் அதில் கூடுகின்ற மக்களே போதுமான சாட்சி ...அங்கு சாதி, மதம் ,கட்சி மற்றும் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடுஇல்லாமல் இறுதியாக அவரைக் காண வருகின்ற காட்சியே சாட்சி ....

இதற்கு உதாரணம் தேவையில்லை என்றே நினைக்கிறேன் !நாமும் நமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ,பேசப்படுகின்ற ஒன்றாக மாற்றிக் காட்டுவோம் !


பழனி குமார்
09.03.2020

நாள் : 9-Mar-20, 9:23 pm

மேலே