ஒரே ஒரு ஆங்கிலச் சொல் பத்து தமிழ்ச் சொற்களை...
ஒரே ஒரு ஆங்கிலச் சொல் பத்து தமிழ்ச் சொற்களை கடித்து குதறி கொன்று போட்டுவிட்டது . அது தான் 'டென்சன்'. இன்று பட்டிக்காட்டு பாமரன் வாயிலும் அது நுழைந்து வெளியே வருகிறது.
அக்காலத்தில் இதய வலி ஏற்பட்டால் மக்கள் கூறுவது படபடப்பாக உள்ளது. தேர்வு எழுதும் மாணவர்கள் கூறுவது குழப்பமாக உள்ளது. இருட்டிலே நடக்கும் போது அச்சமாக உள்ளது என்று கூறுவர்.
இப்போது அனைத்திற்கும் டென்சன் என்ற ஒற்றை வார்த்தை தான்.
இது போலவே திகைப்பு, கலக்கம், வெடவெடப்பு, விதிர்ப்பு, வெலவெலத்து, வியர்த்து, நடுக்கம், நடுநடுங்கி , மயங்கி , தயங்கி முதலிய சொற்களுக்கு மாற்றாக டென்சன் என்ற ஆங்கிலச் சொல்லையே #தமிழர்கள் பயன்படுத்துகின்றனர்.
- தமிழின் வேர்சொற்கள் நூலிலிருந்து (அ.சவரிமுத்து)
இது போல் எல்லா வகையிலும் ஆங்கிலத்தை வைத்து தமிழை கொன்று வருகிறார்கள் தமிழர்கள்.
இந்த நிலையை நாம் இப்போது மாற்றாவிட்டால், இன்னும் சில ஆண்டுகளில் தமிழை தேடினாலும் தமிழர்களிடம் அது காணக்கிடைக்காது.
'டென்சன்' தவிர்ப்போம். நல்ல தமிழில் பேசுவோம்!
நீங்கள் உண்மையான தமிழனாக இருந்தால் இதை பகிரவும்.
ஆதரவு தாருங்கள்:
See more & Like me--->
Interesting thinks tamilan - https://www.facebook.com/pages/Interesting-thinks-tamilan/205474769639175