நீ என்பது நீயே!! கம்பன் மறந்த இராமாயணம் நீ!...
நீ என்பது நீயே!!
கம்பன் மறந்த இராமாயணம் நீ!
கவிஞர் பலர் மறந்த கவிதைகள் நீ!
கற்பனைக்கு எட்டாத ஓவியம் நீ!
கண்கொண்டு பலர் தரிசிக்கும் தெய்வம் நீ!
தன்னுள்ளே நல்லுள்ளம் கொண்டவள் நீ!
தன்னிகரில்லா பெண்ணுள்ளம் நீ!
தரணி போற்றும் தாரகை நீ!
வர்ணம் பல கொண்ட வானவில் நீ!
வர்ணிக்க முடியாத வார்த்தைகள் நீ!
எண்ணிலடங்கா அழகு நீ!
என் எண்ணத்தில் என்றும் நீங்காதவள் நீ!
நீ என்பது என்றும் நீ மட்டுமே!!!