அமைதியாய் இருந்தால் அடக்கமான பெண் என்கிறாய்... அதிகம் பேசினால்...
அமைதியாய் இருந்தால்
அடக்கமான பெண் என்கிறாய்...
அதிகம் பேசினால்
வாயாடி பெண் என்கிறாய்....
அளவாக பேசினால்
தலைகனம் கொண்டவளாம்....
எல்லா இடத்திலும்
பதில பேசினால்
அதிகபிரசங்கி என்கிறாய்...
கேட்டும் பதில் சொல்லாவிடில்
ஒன்றும் தெரியா மக்கென்கிறாய்..
ஆண்களிடம் பேசினால் குடும்ப
பெண்ணில்லை என்கிறாய்...
வழியும் ஆணிடம் விலகி
போனாலோ அழகில்லாதவள்
என்று ஆர்ப்பறிக்கிறாய்...
அண்ணா என்றாலும் வேண்டா
தம்பி என்றாலும் வேண்டா
உன்னை மட்டும் நண்பனென்றால் உடனிருப்பவனுக்கு வேண்டா..
ஆண் என்றால் நான்
எப்படி பழக...?
ஒன்றைமட்டும் புரிந்து கொள்ளுங்கள் ஆண்களே.....!
உங்கள் விருப்பத்திற்கு வாழ
நான் பிறக்கவில்லை....
என்னை என் விருப்படி
வாழ விடு...
யாரும் கிழிக்காத கோட்டுக்குள்
நானே வாழ பழகியவள்... Aathi....