எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என்னை சுற்றி
எத்தனை வருத்தங்களும் வலிகளும் 
கொட்டிக்கிடந்தாலும்
அவற்றின் நடுவே
பூத்திருக்கும் ஒற்றை
ரோஜாவாய்...
உன் அன்பு....

மேலும்

சில நேரங்களில்
வலிகளை சொல்ல 
வார்த்தை கிடைப்பதில்லை...
விடிவெள்ளி விழித்தவுடன் 
விடியல் விழுங்கியதை போல
வார்த்தை தேடலிலேயே முடிந்து போகிறது 
எனது வலிகளும்....

மேலும்

அமைதியாய் இருந்தால்
அடக்கமான பெண் என்கிறாய்...
அதிகம் பேசினால்
வாயாடி பெண் என்கிறாய்....
அளவாக பேசினால் 
தலைகனம் கொண்டவளாம்....
எல்லா இடத்திலும்
பதில பேசினால்
அதிகபிரசங்கி என்கிறாய்...
கேட்டும் பதில் சொல்லாவிடில்
ஒன்றும் தெரியா மக்கென்கிறாய்..
ஆண்களிடம் பேசினால் குடும்ப 
பெண்ணில்லை என்கிறாய்...
வழியும் ஆணிடம் விலகி
போனாலோ அழகில்லாதவள்
என்று ஆர்ப்பறிக்கிறாய்...
அண்ணா என்றாலும் வேண்டா
தம்பி என்றாலும் வேண்டா
உன்னை மட்டும் நண்பனென்றால் உடனிருப்பவனுக்கு வேண்டா..
ஆண் என்றால் நான் 
எப்படி பழக...?
ஒன்றைமட்டும் புரிந்து கொள்ளுங்கள்  ஆண்களே.....!
உங்கள் விருப்பத்திற்கு வாழ
நான் பிறக்கவில்லை....
என்னை என் விருப்படி 
வாழ விடு...
யாரும் கிழிக்காத கோட்டுக்குள்
நானே வாழ பழகியவள்...    Aathi....

மேலும்

வாழ்க்கை பயணம் - முதுமை 

 வானவில் வாழ்க்கையில் 

மின்னலை போன்ற எண்ணங்கள் 

மழையை போன்ற கண்ணீர் துளிகள் 

இளங்காற்றை போன்ற இன்பங்கள் 

இதயம் வருடும் நினைவுகள் 

திரும்பி பார்க்க இயலா இளமை பருவம் 

பணம் என்ற மோகத்தின் தாக்கம் - 

அறுபத்தில் உணரும் நகைப்பு 


முதுமையின்   தொடக்கம் !!!


இவன் 

சே.ஜெகதீஸ்வரன் 

மேலும்

கூர்வாள் கொண்டு பெண்களை

காட்சி பொருளாக காணும் 

கயவர்களின் பிறப்புறுப்பை 
தனியே துண்டித்தெரிய வேண்டும் 
அப்போதாவது மனம் சற்று 
சாந்தம் கொள்ளுமா என்று பாக்கத்தான் 
இப்போடியொரு எண்ணம் எழுந்துள்ளது .... 

பாரத மாதாவே இந்த பாரதம் வேண்டாம் 
எனக் கூறி ஒடிவிடுவாள் போலும் 
எவ்வளவு இன்னல்களை இன்னும் 
அனுபவிக்க வேண்டுமோ தெரியவில்லை! 

இறைவா உண்மையில் நீ இருக்கிறாயா? 
என்ற கேள்வி எழுகிறது 
நடக்கும் அனைத்திற்கும் 
நீ ஒருவனே சாட்சி 

எமது பாவங்களுக்கு உம்மிடம் 
தண்டனை எனில் வெறிபிடித்த 
மனிதனை படைத்த உமக்கு 
என்ன தண்டனை என்பதையும் நீயே கூறு .... 
 
இவள் 
 கீதாவின் மகள்       

மேலும்

தமிழன் என்று கூறும் நாம்
தமிழினம் காத்திட்ட
மரபினை ஏன்
விலகிச் செல்கிறோம் ?
குறைந்தது   பேசும்
வார்த்தைகளிலாவது
தமிழின் சுவையை
எதிர்காலம் உணர்ந்திட
வாளினை எடுப்போமா ... ?
கவிதைகளில்
காதலின் மொழியொடு
தமிழனின் மரபினை
வீசிடத்தான் முயல்வோமா ... ?
வேண்டுகோள் என கொள்வாய் நட்பே !
எதிர்பார்க்கிறேன் .... இன்னும் ....
தமிழ்  இளைய உறவுகளை...
தமிழ் மரபுதனை காத்திட ....

மேலும்

தமிழினம் விழித்தல்; என்றோ! 23-Jan-2019 6:32 pm
போற்றுதற்குரிய படைப்பு பாராட்டுக்கள் தொடரட்டும் நம் இலக்கிய நட்புப் பயணம் தமிழ் அன்னை ஆசிகள் . 23-Jan-2019 5:38 pm

என்னை ஒருவன் காகம் என்றான் என் நிறத்தை பார்த்து. கவலை இல்லை எனக்கு. மனிதனுக்குதான் காதலை, பசியை, கோபத்தை, துன்பத்தை வெளிக்காட்ட பல எழுத்துக்கள் வேண்டும். 

 ஆனால்
 
 காகம் "கா " என்ற ஓற்றை  எழுத்தில்  அனைத்தையும் வெளிப்படுத்திவிடும்............. 
 
 

மேலும்

என்னவள் மனதில் எண்ணுகிறவற்றை எண்ணியபடியே 

எழுதி அனுப்ப  எழுத்தாணி தேடிக்கொண்டிருக்கிறாள் சில யுகங்களாக...

காத்திருப்புடன் உன்னவன் :-)  

மேலும்

இங்கு சில தேர்ந்த நண்பர்கள் இயங்குகிறார்கள்

சில நேரங்களில் அவர்களுக்கு, அவர்களுடைய தேடல் என்ன என்பதை மறந்து, தாங்கள் தான்
பாரதிக்கு இணையானவர் என எண்ணிக் கொள்கிறார்கள்.

இவர்கள் மற்றவர்களுடைய படைப்பில் குறை காண்பதை நிறுத்திவிட்டு தங்களுடைய படைப்புகளில் கவனம் செலுத்தலாம்.

தமிழில் காதலையும் கவியையும் பிரிக்க முடியாது. 

தமிழில் பெரும்பாலான காவியங்கள் காதலைச் சார்ந்தே உள்ளது.

இங்கே உள்ள ஒவ்வொருவரும் தங்களுடைய எண்ணங்களை படைக்க பாரதியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

அவரவருக்கு என்ன திறமை உள்ளதோ அதனை வெளிப்படுத்துகிறார்கள்.

உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் படிக்காதிர்கள்.

வழிகாட்டுதல், விமர்சனங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால் உங்களுடைய வசைகள் அல்ல.

மேலும்

சம்பந்தப்பட்டவர் கவலை பட வேண்டிய விஷயம் அது...படைப்பை செய்யுங்கள்...படிக்கவும்,விமரிசிக்கவும் ஆவலாக இருக்கிறேன். 05-May-2018 9:03 am
நன்றி தோழரே. என்னை யாரும் காயப்படுத்தவில்லை. தளத்தில் உளவும்போது பார்க்க நேரிட்டது. 05-May-2018 6:47 am
நன்றாக கூறினீர்கள். யார் உங்களை காயம் செய்கின்றாரோ நேரிடையாக அவரிடம் கேட்டு தெளிவும் பெறலாம் . இங்கு பதிப்பிக்கும் படைப்புகள் யாவும் அகாடமி விருதுகள் பெற அல்ல ...என்னுடையதையும் சேர்த்து. வாருங்கள் நாம் அவரிடம் பேசலாம். எனக்கும் அந்த ஆதங்கம் நிறைய உண்டு. நாம் கஷ்டப்பட்டு எழுதுவதை உளறல் என்று கூறினால் அதற்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டியவர் ஆகிறார் . ஒருவேளை அவர் விளக்கம் நம் முகமூடிகளை கிழித்து விடும் அபாயம் கூட உண்டு. நான் பொதுவில் என் கவிதைகளை விமரிசனம் செய்யுங்கள் என்று கேட்பது உண்டு. தவறெனில் திருத்தி கொள்ளும் தைரியம் உண்டு. சாரலன் பல பிழைகளை சுட்டி காட்டி உள்ளார். பொது தளத்தில் பதிப்பித்தால் 4 விதமான விமரிசனம் வரத்தான் செய்யும் ...என்ன செய்வது நண்பரே எனது எரோடிக் கவிதைகளை இங்கு நான் பதிப்பது இல்லை. என் நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்து நானே படித்துக்கொள்வேன் . யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் பொது தளத்தில் பதிவு செய்யும் பொது பிறரின் நேரம் டேட்டா மனநிலை போன்ற பல்வேறு விஷயங்களை ஒரு வாசகர் நமக்கு தரும்போது நாமும் அவரின் கருத்துக்களை சற்று கேட்டு விவாதம் (அறிவுபூர்வமாக) செய்தால் திறனற்ற நம் பலவீனங்கள் அறிந்து கொள்ள முடியுமே. ஒருவேளை உங்களுக்கு அது சிரமம் என்றால் கருத்து பகிர்வதற்கு அல்ல என்னும் பொத்தானை கிளிக் செய்து எழுதுங்கள் . வாசகர் படித்து விட்டு போவார். நான் சிலர் பெயரை பார்த்ததும் தலை தெறிக்க ஓடி விடுவேன் ...துணிச்சலான கருத்துக்கு வாழ்த்துக்கள். 04-May-2018 12:43 pm
சூப்பரா சொன்னீங்க நட்பே ...எப்போ பாரு அது சரி இல்லை எதுக்கு இந்த வார்த்தை னு சும்மா நொய் நொய் னு கருத்து சொல்லிட்டே இருக்காங்க . காதல் எப்பேர்ப்பட்ட விஷயம் ...சாப்பாடு தண்ணி இல்லாட்டி கூட நாம லவ் நா விட்டே தரமாட்டோம் னு சிலருக்கு புரியலை ...விட்டு தள்ளுங்க நாம வழக்கம்போல லவ் லவ் னு எழுதி தள்ளுவோம். சூப்பர் கருத்து உங்களோடது ... 04-May-2018 11:56 am

எண்ணம் என்ற ஏட்டில் எழுத எண்ணிலடங்கா எண்ணங்கள்...

இருந்தும் ஏனோ எழுத மறுக்கிறது என் எழுத்தாணி..!

?

மேலும்

மேலும்...

மேலே