எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தேனமுதில் செவிகளுக்குள் சித்திரம் பேசுய இசையின் முரசே.... நாகூரை...

தேனமுதில் செவிகளுக்குள் 
சித்திரம் பேசுய இசையின் முரசே....

நாகூரை நாடறியச் செய்த 
இசையருவியே...

கல்யாணப் பந்தலின் கவிஞரே....
வரிகளால் வானம் தொடும் வல்லுனரே...

எட்டாத சிந்தனையை ஏட்டில் எழுதி 
பாட்டாய் சமர்ப்பித்த கவிதை உலக மன்னரே....

காலைப் பொழுதும் காத்திருக்கும் 
உம் காந்த குரலுக்காக...

மாலைப் பொழுதும் மயங்கி கிடக்கும்
உம் தாலாட்டு பாடலுக்காக....

தாளத்திற்கு தடை என்றாலும்
காலத்திற்கு கற்பித்த உம் காவியங்களுக்கு தடையில்லை...

மண்ணறை சென்றாலும் 
தீனோரே சுற்றி வருகிறது 
உம் கறைபடியாத காணம்....
Create by ✍️ thamim ✍️

நாள் : 10-Apr-20, 12:16 pm

மேலே