எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வந்ததே கொரோனா வாழ்வாதாரத்தை கொண்றதே கொரோனா.. ஓடி ஓடி...

வந்ததே கொரோனா
வாழ்வாதாரத்தை 
கொண்றதே கொரோனா..

ஓடி ஓடி உழைத்த சொத்தையும்
ஒழிக்க வந்த கொரோனா...

தான் என்ற எண்ணம் கொண்ட 
மனிதனை
தகர்க்க வந்த கொரோனா...

பூலோக ஆசையை 
புதைக்க வந்த கொரோனா..

மண்ணறை வாழ்க்கையை 
நினைக்க வைத்த கொரோனா..

மனிதன் ஆடிய ஆட்டத்தை 
அடக்க வந்த கொரோனா...

மதுவால் தள்ளாடியவர்களை 
தடுக்க வந்த கொரோனா...

மாதுவிடம் தகாத முறையில் 
உறவாடியவர்களை தடுக்க
வந்த  கொரோனா...

சாதியில் உறைந்தவர்களையும் 
பீதியில் உறைய வைத்த கொரோனா...

கோடியில் பிழல்பவர்களையும்
முகமூடி அணிய வைத்த கொரோனா...

உடமைகள் பறிபோய்விடுமோ என்ற பயத்தில் இருந்தவர்களை.
உயிரும் 
ஒரு நாள் பறிபோகும் என்பதை 
உணர்த்த வந்த கொரோனா..

மனிதன் உயிர் பிரியும் வரை 
மண்ணறையை நினைவு கூறுவதில்லை..
மண்ணறையை நினைவாற்ற வந்த கொரோனா....

உன்னை அனுப்பியவன் சீனனா..
இல்லை இறைவனா....

மண்ணறையை சென்றடையும் முன் மனிதத்தை வென்றடையுங்கள்....!
Create by ✍️ thamim ✍️

நாள் : 16-Apr-20, 8:07 pm

மேலே