#தமிழ்பாரதியின் #திருக்குறள்கதைகள் #விலைமதிப்பில்லாப் புத்தகம் தன் மகளுக்கு பிறந்தநாள்...
#தமிழ்பாரதியின் #திருக்குறள்கதைகள்
#விலைமதிப்பில்லாப் புத்தகம்
தன் மகளுக்கு பிறந்தநாள் பரிசாக திருக்குறள் புத்தகம் ஒன்றை வாங்கிக் கொடுத்தார் அப்பா தாமு.
அப்பா, என்ன இது? திருக்குறள் புத்தகத்தை வாங்கித் தந்திருக்கீஙக? கொஞ்சம் காஸ்ட்லீயா ஒரு ஐ ஃபோன் வாங்கியிருக்கலாம்ல...
என்றாள் மாலதி சலிப்போடு.
இதுவும் காஸ்ட்லீ தான் கண்ணு. நீ சின்ன பொண்ணு அதுவும் ஏழாம் வகுப்பு தான் படிக்கிற. அதான் திருக்குறள் புத்தகத்தைப் பரிசா தந்தேன். இதை நீ படிச்சா விலைமதில்லா அறிவுப் பெருகும்.
இதைத் தான் நான் பாடத்திலேயே படிக்கிறேனே..
பாடத்தில் மட்டுமல்ல இதனை நீ தினமும் படிக்க வேண்டும்.
தினமுமா?
ஆமா கண்ணு. இது சாதாரண புத்தகமல்ல. இது நம் வாழ்வின் வழிகாட்டி. இந்த புத்தகம் உன்னோடு இருந்தால் 1330 நண்பர்கள், 133 ஆசிரியர்கள், 3 வழிகாட்டிகள் உன்னோடு இருப்பது போல நீ உணர்வாய் என்றார் அப்பா.
தினமொரு குறள் படி. உனக்கு புதியதொரு அறிவும் அனுபவமும் கிடைக்கும்.
மாலதி திருக்குறள் புத்தகத்தை மகிழ்வுடன் பெற்றுக் கொண்டாள்.