எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தொலைத்துவிட்டோம்... காளியம்மன் கோவில் மேடையை காளியம்மன் கோவில் திருவிழாவை...

தொலைத்துவிட்டோம்...


காளியம்மன் கோவில் மேடையை
காளியம்மன் கோவில் திருவிழாவை
அம்மேடையில் ஆடும் தாயத்தை, வெட்டுக்கல் ஆட்டத்தை
மேடை வேப்ப மரத்தில் 
கரைந்த காகங்களை
கூவிய குயில்களை
கீச்சிடும் அணில்களை
மேடைகளில் தாத்தாக்களின் நக்கலான, நையாண்டியான பேச்சுக்களை
அன்பை
அறிவை
அறிவுரையை
ஆறுதலை
கூட்டுக்குடும்ப வாழ்க்கையை
மண்புழுதி தெருக்களை
நிழல் தந்த மரங்களை...
மின்ஒளி தந்த மின்கம்பங்களை...
ஒட்டுவீடுகளை...
மயிலாத்தா மற்றும் கொவ பெட்டிக்கடையில் கிடைக்கும்
அஞ்சுக்காசு அப்பளத்தை
எள்ளுச்சீடையை
எழந்த பழத்தை
அஞ்சுக்காசு ,பத்துக்காசு
இருபதுகாசு நாணயங்களை
ஊரின் நுழைவுவாயிலில்
இருந்த தண்ணி கிணத்தை
தொலைக்காட்சி அறையை
தொலைக்காட்சி பெட்டியை
தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடும்
ஒளியும் ஒலியை,
திசைகள் நாடகத்தை
காணக்கூடும் ஊர்சனத்தை...
ஆற்றில் ஓடும் தண்ணீரை
ஆற்றைக் கடந்து பள்ளிக்கு
சென்ற நாட்களை,
ஆற்றை கடக்க முடியாத போது
சுடுகாட்டு பாதை வழியாக
பள்ளிக்கு சென்ற நாட்களை...
எம்.ஜி.ஆர் சியான் தோட்டத்து
புளியமரத்தை..
வாழத்தோப்புகளை
கரையோரம் ஒய்யாரமாய் வளர்ந்திருந்த
தென்னைமரங்களை...
நீச்சல் பழகிய கிணறுகளை...
காசியண்ணனோட மாட்டுவண்டியை
மாட்டுவண்டி பயணத்தை....
காசியண்ணன் வீட்டருகில்
இருந்த காலியிடத்தில்
மாலை பொழுதுகளில்
விளையாடிய விளையாட்டுகளை...
மாலைநேர வகுப்புகளை
நிம்மதியாய் வாழ்ந்த வாழ்க்கையை
உறவுகளின் பொதுநலத்தை
தொலைத்துவிட்டோம்...
ஆம்
பகலை பூமியிலும்
இரவை வானத்திலும்
நினைவுகளை  மூளைக்குள்ளும் தொலைத்துவிட்டு,
இந்நூற்றாண்டில்
தூரங்களும் இதயங்களும் சுருங்கிப்போனது
தொலைதொடர்பு யுகத்தில்....
தன்னையே தனக்குள் தொலைத்துவிட்டு தொலைத்துவிட்ட சுவடுகள்  ஏதுமறியாமல்
தொலைக்ககூடாததை  தொலைத்துவிட்டு
தொலைக்க வேண்டியவற்றை
தொலைக்காமல் இருகப்பற்றி
வாழ்ந்து கொண்டிருக்கிறது  மனிதர் கூட்டம். 

தொலைத்துவிட்டவைகளை எண்ணி
கண்ணீரோடும் இவை மீண்டும் கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்தோடும்
கவிதையாக்கம்....
க சுதாகர் M.Sc,B.Ed.D.T.Ed

பதிவு : சுதாகர் ஜி
நாள் : 27-Jul-20, 9:00 pm

மேலே