வாழ்க்கையில் தான் எத்தனை மாற்றங்கள் ....! பருவத்திற்கேற்ப ,...
வாழ்க்கையில் தான் எத்தனை மாற்றங்கள் ....!
பருவத்திற்கேற்ப , வயதிற்கேற்ப ,வளர்ச்சிக்கேற்ப என பலவித காலகட்டத்தில்மனிதன் மாறுகிறான் .
தோற்றத்தில் , அறிவில் , ஆற்றலில் , சுற்றியுள்ள சூழலில் , பொருளாதார நிலையில் , பெறுகின்ற வசதி வாய்ப்புகள் மூலமாகவும் தோற்றம் மாறுகிறது .பிறக்கும் எவருக்கும் தான் வாழப்போகும் காலம் தெரியாது , இருக்கப்போகும் நிலை தெரியாது . மாறிடப்போகும் சூழ்நிலை தெரியாது . ஆனாலும்அவரவர் தாமே தனக்குள் ஒரு கொள்கையை மையமாக வைத்து அதனை பின்பற்றுவதும் , இலக்கு ஒன்றினை தேர்வு செய்து அதனை நோக்கி ஓர் லட்சிய பாதையில் பயணிப்பதும் தான் வாழ்க்கை .
அந்த நோக்கம் நிறைவேறுதா இல்லையா என்று தெரியாமல் தொடர்கின்ற வாழ்க்கை !!!!வெற்றி பெற்றால் மகிழ்ச்சி , இல்லையெனில் துவண்டாலும், தளராமல் தொடர்ந்து நடைபோடுவது என்றாகி இறுதியில் ஒரு முற்றுப்புள்ளியில் முடிவது தான் வாழ்க்கை ! அந்தவிதத்தில் தான் எனது வாழ்க்கையும் . நடந்து முடிந்ததை அசைபோட்டுக்கொண்டு , நடக்க இருப்பதை கற்பனையில் வடிவமைத்து, காலத்தைத் தள்ளிக்கொண்டு இருப்பவன் .
வெற்றி காணாத லட்சியம் , முடிவு பெறாத நோக்கம் , நிலைமாறாத நெஞ்சம் , அடிக்கடிக் குன்றிடும் உடல்நலம், எதிர்பாராத உலகச்சூழல் , கரடுமுரடான நாட்டு நடப்பு என இப்படி நகர்கிறது .இயற்கையாக நடப்பவை நடக்கட்டும் என்ற உறுதியுடன் தொடர்கிறேன் ...
முடிவின் முடிவை அறியாத ஒரு சாமானியனாக ...சராசரி மனிதனாக ...உலக மக்கள் தொகையில் ஒருவனாக ...மொழியால் , இனத்தால் ஒரு தமிழனாக ...அதே நேரத்தில் ஒரு இந்தியன் என்ற உணர்வோடு பற்றோடு !
பழனி குமார்
10.10.2020