எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காடுமலையெல்லாம் கால் நடையா நடக்கிறேன் நானே .. பார்வை...

காடுமலையெல்லாம் 
கால் நடையா
நடக்கிறேன் நானே ..

பார்வை மூழ்கிடும்
பூமியன்னையின்
இயற்கை அழகிலே ...

பயணம் செய்திடும்
நெஞ்சமொன்றின்
தனிமை நிழலிலே ...

பச்சைப் பசேலென 
நிறைந்த காடுகளைக்
கண்டு  வழிமாறின ...

சோலை எங்கும் பறந்த
வண்ணப்பூச்சி கண்டு
திழைத்தன ...

பசுந்தென்றல் வந்து 
வீசும்போது புதுசுவாசம் கண்டன...

பூவிதழ் கூட்டம் கண்டு இதழ்கள் இரண்டும் விரிந்தன...

குருவிகளின் கீச்சொலிகள் செவியைக் கீறின...

அருவிநீரில் மனதும் ஆனந்தத்தில் ஆடின...

பதிவு : BARATHRAJ M
நாள் : 4-Jun-21, 8:47 am

மேலே