எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சுற்றுப்புறச் சூழல் . பச்சைப்பசேலென்ற பெருவெளி எம் சுற்றுப்புறச்சூழல்....

சுற்றுப்புறச் சூழல்


பச்சைப்பசேலென்ற பெருவெளி எம் சுற்றுப்புறச்சூழல். 

இன்னும் அழிப்பதற்க்கு ஏதும் மீதமுண்டா மானிடா. 

உன் வறட்டு கௌரவத்திற்காக அன்று நீ காடுகளை தீக்கிரையாக்கி அழித்து ஒழித்தாய். 

அது போக இன்று எம் சுற்றாடலையும் சூரயாட எத்தனுத்து அதில் வெற்றி பெற்றதாய் உனக்குள் ஒரு மமதயடா.

நகரமயமாக்கலொலும் பெயர் நாமம் சூட்டி நீ.. 

பெரும் மாடங்கள் அமைக்க பல மரங்களை சிதைத்து எம் சூழலை அழித்து ஒளித்தாயடா.

பின்னொரு காலம் மரங்களையும் பச்சை பாசிகளையும் படமாய்தான் காணும் நம் பேரன் பேத்திகள்.

*அந்தோ பரிதாபமே!*
எம் முன்னோர்கள் ஓய்வெடுத்து களைப்பாறிய சாலையோர மரங்கள் எங்கே!

பெற்றோர்கள் எம் தம்பி தங்கையர் கண்ணுறங்க சேலையில் தெட்டில் கட்டிய பெரு மரங்கள் எங்கே.! 

பாடசாலை சுற்றத்தில் வளையமாடி எம் குரு நாதாக்கள் பாடம் புகட்டிய பச்சை மரங்கள் எங்கே.!

பாடசாலை முடிவில் பசியின் பிணியில் வீடு சென்ற நாங்கள் வழித்தடங்களில் துளி ஆடிய ஆலமர விழுதுகள் எங்கே.! 

பாய்மர படகுகளும் பாய் இழைத்த தென்னை ஓலைகளும் பட்டம் கட்டிய பச்சை ஈக்கில்களும் எங்கே.!

மனிதா! போதும் உன் பாவச்செயல் நிறுத்திவிடு. ||

எம் சுற்றாடல் தான் சுகாதாரத்தின் வெளிப்பாடு. 

உன் பாதகங்களால் இன்று சுத்தமான காற்றும் சூரயாடப்பட்டு,அண்ட சமவெளியும் ஆபத்தில் திணறுகிறது. 
 

மனிதா துணிந்தெழு! 

வீட்டுக்கு வீடு ஓங்கி ஒலிக்கும் பெரு மரங்களையும்,எண்ணங்கள் செளிக்கும் செடி,கொடிகளையும். வழர்த்திடு.

சுத்தமான காற்றை சுவாசிக்க கற்றிடு.

கவிப்பொய்கை 
ஜவ்சன் அஹமட்

பதிவு : Kavipoikai
நாள் : 4-Jul-21, 8:03 pm

மேலே