இருள் சூழும் மாலை பொழுதில் மழை பொழிந்து வெறித்தது...
இருள் சூழும் மாலை பொழுதில்
மழை பொழிந்து வெறித்தது எங்கள் வீட்டை விட்டு யாவரும் வெளிச்சத்தை நோக்கி பறந்து மாய்ந்து கொண்டிருந்தனர் ஒன்றன் பின் ஒன்றாக இரையாக கெளரவ படைகளைப் போல் நிமிடத்திற்கு நிமிடம் இது யாவையும் பார்த்து கொண்டிருந்த அந்த கூட்டத்தின் தளபதி உலகம் விடிந்தது சுதந்திரம் பிறந்தது என்று தானே அனைவரையும் அந்த மின்விளக்கின் சுடர் ஒளியை சுற்றி ஆனந்தத்தை களியுங்கள் என்று அனுப்பி வைத்தேன் செவ்வானம் தோன்றியும் வீட்டிற்கு யாரும் திரும்பியபாடில்லையே வன்னம் கடைசியில் சுடரை நோக்கி பறந்து கோ-வும் இரையானது
-- ஈசல்