நட்பு அன்புக்கு அன்னை அரவணைப்புக்கு தந்தை உரிமைக்கு உடன்...
நட்பு
அன்புக்கு அன்னை
அரவணைப்புக்கு தந்தை
உரிமைக்கு உடன் பிறப்புகள்
உதவிக்கு உறவினர்கள்
அறிவுக்கு ஆசான்
ஒவ்வொரு மனிதனும் ஒரு உறவு
என்றபோதும்
ஒட்டுமொத்த உறவுகளும்
ஒன்றுகூடி உயிர் எழுந்தது
ஒரு உறவாக.........................
எதிர்பார்ப்பு எதுவுமின்றி
எதார்த்தம் குறைவின்றி
கூட்டங்கள் கூட்டாமல்
எனக்குள் என்னை அறியாமல்
மாற்றங்கள் சிலபல
அரங்கேற்றினான்
என் நண்பன்...............
இந்த நட்பு எனும் மூன்றெழுத்தில்
மூவுலகம் பெற்ற ஆனந்தம்
ஆழ்கடல் அலைகளாய்
என் மனதில் என்றென்றும்...........................