எண்ணத்தின் துணைகொண்டு வண்ணத்தில் புதையுண்டு இன்பத்தில் நிலைகொண்டு துன்பத்தில்...
எண்ணத்தின் துணைகொண்டு
வண்ணத்தில் புதையுண்டு
இன்பத்தில் நிலைகொண்டு
துன்பத்தில் சிதையுண்டு
சொந்தத்தில் பினைகொண்டு
பந்தத்தில் பகையுண்டு
நெஞ்சத்தில் விஷங்கொண்டு
வஞ்சத்தில் வகையுண்டு
பாசத்தில் திரைகொண்டு
வேசத்தில் இரையுண்டு
அச்சத்தில் உரைகொண்டு
மனவுச்சத்தில் இறையுண்டு.