எனக்கோர் வரம் வேண்டும் தமிழ்மணக்க! என்னில் எழும் எண்ணங்கள்...
எனக்கோர் வரம் வேண்டும் தமிழ்மணக்க!
என்னில் எழும் எண்ணங்கள் நிலைக்காக!
என்பிறப்பு கண்களோடு மொழி காக்க!
எண்குணன் அருள்பொழிய அற வழிகாக்க!
எழுவாய் அமுதசுரபி அருள்மொழி காக்க
எழுதுகோல் உறுதியாய் செம்மொழி காக்க!
இனிய மொழி இலக்கிய பிறப்பில் சிறப்பு
இயல்பு முறை மண்ணின் முத்திரை இச்சூழலில் முச்சுவை மக்களும்
இலச்சை தமிழின் உலகின் மூத்த குடி
இனிமை மொழியான சான்றோர் பொழிய
இனிவரும் நாளில் எம்மொழி ஆளும்
முன்னேர் ஆண்ட தேசம்! ஆண்டவர்
முதன்மை உலக சங்க துவக்கும் நாடு
முழுமை தமிழ் மலர்ந்த குமரியில் தானே
முத்தமிழ் ஆதியும் அகத்தியம் பிறப் பல்லவா!
எண்திசையும் விஞ்ஞானம் வளர்ந்த வியப்பு
எக்கலையும் செதுக்கிய சிலைகள் வியப்பு
எந்நாளும் உயிராய் திகழும் தமிழ்கலை!
எந்தையும் மகிழ்ந்துகுலவி தமிழ் நாளன்றே!
கலையுலகில் கற்றோர் உலவிய என்தேசம்!
செம்மொழி சிறப்பு செழிப் பானவாழ்ந்தார்
வான்னுரையும்மலர்ந்து வாழ்ந்தார் அன்று
செழிப்புடன் வாழ்ந்தார் சான்றோர் பதிப்பு
இயக்கைசீர்றம் தரணி அழிந்தது
தமிழும் பிளந்தது நிலம் நீரானது!
ஆண்ட சாம்ராஜ்யம் மறைந்தது
வாழ்ந்தவர் மண்ணில் புதைந்தனர்
உயர்ந்த தாய் என் தமிழே!தரணியெங்கும்
என் உலகில் அமுதின் அமுதம் திகழும்
இனிவரும் நாளில் ஆளும் செம்மையோடு
இனியோர் மண் ணில்தமிழ் மணக்கச்செய்வீர்.
எனக்கோர்வரம்வேண்டும் தமிழ்மணமாக்க!
என்னில் எழும் எண்ணங்கள் நிலை காக்க!
ஏழுப்பிறப்பும் தமிழ் தொண்டாற்ற
உலக மெங்கும்தமிழ் மணக்க வரமொண்டும்