ஒரு கருவில் தரித்து கைகோர்த்து நடை பழகி பல...
ஒரு கருவில் தரித்து
கைகோர்த்து நடை பழகி
பல நேரங்களில் சண்டை
சில நேரங்களில் அன்பின் பரிமாற்றம்
தொண்டையடைக்கும் துயரமோ
மறவா மகிழ்ச்சியோ
என்னோடு நிழலென நின்றவனே
எனக்கும் இளையவனே
தந்தையை போல் சிந்திப்பவனே
உள்ளம் பூரித்து நிற்கிறேன்
கண்ணீர்த் துளிகளாய் அன்பை வெளிப்படுத்த
இந்த ஜென்மம் ஒன்று போதாது
உன் அன்புக்கடனை அடைக்க…