எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

~~~~~~~~~~~~என்னவளின் வருகைக்கு ~~~~~~~~~~~~~~~~ எழுத்துக்கள் எல்லாம் காத்துக் கிடக்கின்றன,...

~~~~~~~~~~~~என்னவளின் வருகைக்கு ~~~~~~~~~~~~~~~~


எழுத்துக்கள் எல்லாம் காத்துக் கிடக்கின்றன,

ஓர் சிறந்த கவிதையை கோர்க்க!

உளிகள் எல்லாம் ஓய்ந்து  கிடக்கின்றன,

ஓர் அற்புத சிலையை வடிமைக்க! 

சுரங்கள் எல்லாம் சோர்ந்து  கிடக்கின்றன,

ஓர் இனிமையான இசையை மீட்ட!

வண்ணங்கள் எல்லாம் வாடி  கிடக்கின்றன, 

ஓர் அழகான ஓவியத்தை தீட்ட.

இப்படித்தான் நானும் காத்துக் கிடக்கிறேன்,  

என்னவளின் வருகைக்கு வழி மேல் விழி வைத்து!!!

பதிவு : zanth
நாள் : 20-Feb-22, 8:27 pm

மேலே