எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

✅✅✅✅✅✅✅✅✅✅✅ *குறுங்கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* ✅✅✅✅✅✅✅✅✅✅✅ ஏகப்பட்ட...

✅✅✅✅✅✅✅✅✅✅✅

*குறுங்கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*

✅✅✅✅✅✅✅✅✅✅✅

ஏகப்பட்ட தாகம்

தொண்டையில்

இளநீர் விற்பவருக்கு

❎❎❎❎❎❎❎❎❎❎❎

வேகாத வெயிலில்

நடந்து செல்கிறார்

குடையை சரிசெய்பவர்

❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️

மெத்தை உற்பத்தியாளர்

இரவில் உறங்குகிறார்

பாய் படுக்கையில்

✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️

மாடி வீட்டைக் கட்டுபவர்

வாழ்ந்து வருகிறார்

மண் குடிசையில்

❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️

ஓட்டல் சிறுவன்

உணவு பரிமாறுகிறான்

வயிற்றுப்பசியோடு


*கவிதை ரசிகன்*

✅✅✅✅✅✅✅✅✅✅✅

நாள் : 17-Apr-22, 10:40 pm

மேலே