எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நெடுந்தூர பயணத்தில் நெடுஞ்சாலை ஓரத்தில் சில நேரம் ஓய்வெடுத்து...

நெடுந்தூர பயணத்தில்

நெடுஞ்சாலை ஓரத்தில்
சில நேரம் ஓய்வெடுத்து
பெருங்காதல் கொள்ள வேண்டும்...❣️
இருள் சூழ்ந்த யாமத்தில்
இளைப்பாறும் நேரத்தில்
உறங்காத காமத்தை 
உசுப்பேத்தி கொல்ல வேண்டும்...✨
என்னறைகள் முழுவதிலும்
உன் வாசம் நிரப்ப வேண்டும்...🪄
உன் முத்த சத்தங்களே 
கடிகாரமாய் அலம்ப வேண்டும்...💫
விழிப்பேச்சை நிறுத்தி விட்டு
விரல் பேச்சை தொடங்க வேண்டும்...❣️
விரல் பேச விரல் பேச 
திமிர் கொஞ்சம் அடங்க வேண்டும்...✨
கற்பனையில் கண்டதெல்லாம்
கண்ணெதிரே நிகழ வேண்டும்...🪄
கண்ணெதிரே நிகழ்ந்ததெல்லாம்
கற்பனையில் மகிழ வேண்டும்...♥️💫
நம் வெட்கம் உடையும் வரை
நள்ளிரவு தொடர வேண்டும்...❣️✨
இப்படியே நம் நாட்கள்
இறுதி வரை நகர வேண்டும்...🥰🥰
கொள்ள வந்த எமனும் கூட
கண்டு வெட்கி தளர வேண்டும்...💯💌🔐✨

                 

பதிவு : Rajeswari
நாள் : 22-Apr-22, 7:44 pm

மேலே