எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எல்லையில்லாக் கல்வி !!! ----------------------------------------- கல்வி கரையில ......

எல்லையில்லாக் கல்வி !!!
-----------------------------------------
கல்வி கரையில ...

மன்னைத் தோண்டி
மரம் வளர்த்த மனிதன்
விண்ணைத் தாண்டி
விந்தை செய்தது
கல்வியால் மட்டுமே !

காட்டுக்குள் விலங்கோடு
வாழ்ந்து வந்த மனிதன்
நாட்டை ஏற்படுத்தி
நலமுடன் வாழ்ந்தது
கல்வியால் மட்டுமே !

அரிவாள் ஏந்தி அதிக
கொலை செய்த மனிதன்
தன் அறிவால் நிறைய
சாதிக்கத் துணிந்தது
கல்வியால் மட்டுமே!

 மண்ணிலும் கல்லிலும்
புதைந்து கிடந்த மனிதன்
எண்ணையும் எழுத்தையும்
ஏற்றி பிடித்தது
கல்வியால் மட்டுமே !
மனிதன்
வில்நயம் மறந்து
சொல்நயம் காத்தததும் ...
விஜ்ஞானம் மெய்ஞானம்
இரண்டும் தழைத்ததும் ...
மாக்களாய் இருந்தோர்
மக்களாய் ஆனதும் ..
சென்ற இடமெல்லாம்
சிறப்பு பெற்றதும்...
எல்லையில்லாத இந்த
கல்வியால் மட்டுமே !

கல்வி என்பது
கொடுப்பினும் குறையாதது !
எடுப்பினும் எதிர்க்காதது !
கெடுப்பினும் திரியாதது !
தடுப்பினும் நிற்காதது !
ஏனெனில்
கல்வி எல்லையே இல்லாதது !!!
மாமுகி
 
நாள் : 2-Jul-22, 3:50 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே