எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மீண்டும் மீண்டும் வர வேண்டும் என்று தான் ஆசை...!!!...

மீண்டும் மீண்டும் 
வர வேண்டும் என்று தான்
ஆசை...!!!
உன் மனதின்
ஓரத்தில் நினைவுக் குப்பை என 
கசக்கிப் போட்ட
என் நினைவுத்தாள்களில்
நாம் வரைந்த கவிதைகளை
மீண்டும் கிளறி எடுத்து
படித்திட வேண்டும்
எம் இறந்த காலத்தின்
உயிரிப்பான நினைவுகளை
உன் நினைவில் எடுத்து
உயிர்பாக்கிட வேண்டும்...!!!
உலகின் எதோ ஓரத்தில்
யாருக்கோ நிகழும்
அதிசங்களும்
மாயாஜாலங்களும்
எம் வாழ்வில் நிகழ்ந்திட
செய்ய வேண்டும்...!!!

ஹம்.... ஆசை தான்...!!!

இத்தனை இருந்தும்
ஏதோ தயக்கம் 
மட்டும் 
என்னை தடுக்கின்றது....!!!

உந்தன்
புறக்கணிப்புக்கள்
என் மீதான
வெறுப்பாய் 
மாறிவிடுமோ 
என்ற பயம்...!!!
எந்தன் மனதின்
ஓரம் கொஞ்சம் மீதமாய் 
இருக்கும்
தன்மனம்....!!!

இவை எல்லாவற்றையும்
தாண்டி
அப்பப்போது
என் முயற்சிகளையும்
கைவிடுவதில்லை...!!!

ஒரு முடிவுரை வரைய 
ஒரு முடிவு வேண்டுமே....!!!

பதிவு : Sathyapireyan
நாள் : 27-Jul-22, 9:31 am

மேலே