எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முகவரி இன்றி முடிந்து போன உறவுகளிடம் தான் முடங்கி...

முகவரி இன்றி முடிந்து போன உறவுகளிடம் தான் 
முடங்கி விடுகிறது 
நம் நினைவுகள்...! 

காலங்கள் கடந்தாலும் 
கவிதைகளின் 
அழகோ பொருளோ 
மாறப்போவதில்லை 
மாறாக 
அவை இலக்கிய 
மகத்துவம் அடைந்துவிடும்...!! 

நினைவுகளும் 
ஓர் அழகிய கவிதைகள் தான்....!!! எப்போதும் மகிமை 
குன்றாக் கவிதை..!!! 

அதன் இரசிகனாய் 
அவை தரும் உணர்வுகள் 
ஏராளம்...!!! 
அதன் கண்ணீர்களும் 
சுகம் தரும் அதன் போதையில்...!!! வெந்நீராய் 
உளம் சுடும் அதன் வலியில்...!!! 

வருடங்கள் தானே கடந்தன 
உன்னை நினைத்து சில காலம் உன்னோடு சேர்ந்து சில காலம் 
உன் நினைவுகளேடு சில காலம்...!!!

 எல்லாம் வருடங்களில் வரையறுத்தால் வாழ்வின் காலம் முடிந்து விடும்...!!! 

தொலைந்ததை தேடவே முகவரிகள் வேண்டும் 
என்னோடு நீ இருக்கின்றாய் 
என்றும் எப்போதும் 
என் நினைவாய் 
உன் நினைவாய் 
நம் நினைவாய்...!!! 

நீங்கிச் சென்ற பின் 
நீ படித்த புத்தகத்தில் 
நீ கடந்த நபர்களில்
 நீ கண்ட கனவுகளில் 
எங்கேயும் ஓர் ஓரமாய் 
என் நினைவுகள் கடந்திருக்கும்...!!! 

இது போதுமே...!!!

பதிவு : Sathyapireyan
நாள் : 27-Jul-22, 9:30 am

மேலே