எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அதிக உவமைகள் கொண்டு ஆர்பரிக்க ஒன்னும் இல்லை...!!! அவள்...

அதிக உவமைகள்
கொண்டு 
ஆர்பரிக்க ஒன்னும் 
இல்லை...!!!
அவள் ஓவியம்
நான் கவிஞன்...!!!
இப்போது நான்
ஓவியத்தின் உயிரோட்டதை
இரசிப்பதா....!
இல்லை 
அவள் விழிகளில்
உள்ள உயிரினை 
இரசிப்பதா....!!!

கற்பனைகள் 
கொட்டி
அதிகம் வர்ணிக்கத்
தேவையில்லை...!!
அவள் கவிதை 
நான் ரசிகன்...!!
அதில் உள்ள
எழுத்துப் பிழைகளும்
எனக்கு கவிநயமாய்
காட்சியளிக்குதே...!!
ஆயிரம் மொழிகள்
விளக்க முடியா அழகை
இரு விழிகள்
நொடிப் பொழுதில் 
குறி சொல்லுதே....!!!!

இரவின் இருளை
ஒன்று திரட்டி
மையாக்கி உதட்டோரமாய்
மச்சம் கொண்டவள்..!!
தரை தொடும் கூந்தலை
நிலம் பட விடாது
பின்னல் மடிப்பிட்டவள்...!!!

உறைவிடம் தேடி
உலன்ற என் இதயத்தை
கடைவிழிப் பார்வையில்
கைபற்றி சிறையிட்டாள்...!!!
தீர்வுகள் தேடி 
பல தீபாவளிகள் கடந்துவிட்டன...!!
காணாமல் ஆக்கப்படோர் 
வரிசையில் கடைசியில்
என் பெயர்....!!!!

புன்னகைக்குதோ....!!
பூ பூக்குதோ....!!
பல விவாதங்கள் 
நடந்தும் விடை தெரியவில்லை...!!
மலர்கள் சுவாசிக்கும்
நறுமணக் காற்று
வியர்வைத் துளியின்
ஆவியுயிர்ப்பு...!!!

சிறகடிக்கும் 
வண்ணத்துப் பூச்சிகள்
இரு விழிகள் மேல்
இமையாய்....!!!!
இராமன் கூட தோற்றுடுவன்
இவள் புருவ வில்லை
வளைக்க...!!!
ஊரடங்கு வீதியில்
தனிமையில்  நான்...!!!
உள்ளுக்குள் பயம்
வெளியில் 
மிதப்பு....!!!!

என் கனவுத் திரையரங்கில்
வெள்ளிவிழா படம்...!!
இன்னும் வாடகை தரவில்லை
எத்தனை கோடி வசூலோ...!!!
என் பாடப் புத்தகத்தின்
முதற்பக்கம்...!!!
இன்னும் முழுமையா 
படிச்சு முடிக்கவில்லை....!!!
என் தூக்கத்தை முறுக்கும்
காலைத் தேனீர்
என்னை உறங்க விடுவதில்லை...!!

பதிவு : Sathyapireyan
நாள் : 27-Jul-22, 9:29 am

மேலே