"இன்று சில பெண்கள் ஜீன்ஸ் பாண்ட் அணிந்து சாலையில்...
"இன்று சில பெண்கள்
ஜீன்ஸ் பாண்ட் அணிந்து
சாலையில் செல்வதை
பார்த்தேன். அழகாய் இருந்தது.
அழகு என்பது confidence தான்...!"
அவள் பெயர் தேவகி
இந்த சமூகத்தின்
சாமானிய பெண்ணை
பிரதிநிதித்துவப்படுத்தும்
சாதாரண பெண்...!!!
ஆணாதிக்க
கூண்டுடைத்து
வெளி பறக்கும்
பெண் பறவைகளில்
ஒருத்தி...!!!
ஆனாலும் தன்
ஆசைகளை
யாரிடமும் சொல்ல
வழியின்றி
நாட்குறிப்புடன்
நாளும்
கதை பேசி
மகிழ்ந்து கொள்வாள்...!!!
தனக்கு
அழகென்று தெரிவதை
இரசித்து
பாராட்டவோ
தனது
அன்றாட கோபங்களை
கேள்விகளை
வெளிக்காட்டவோ
அவளுக்கு
அவ்வளவு சுதந்திரம்
வழங்கப்பட்டதாய்
தெரியவில்லை...!!!
என்னதான்
படித்தாலும்
அவள்
அவன் ஆகிட முடியாது
என்பதே
அவர்களின் வாதம்...!!!
அதில் சில
அவள்களும்
அடங்கும்...!!!
அவளின்
நாட்குறிப்பு
உரையாடல்கள் எல்லாம்
மிகவும்
இரகசியமானவை...!!
அவளுக்கு தெரியும்
அவர்களுக்கு
அவற்றை புரியும்
அளவுக்கு
அறிவும் இல்லை
அறிவு முதிர்ச்சியும் இல்லை
அதை எல்லாம் எண்ணி
அவள்
கவலை கொள்வதுமில்லை...!!!
அவள் செல்வதை போல
அவள்தான்
உலகின் அழகி...!!
அவள் அளவிற்கு
இந்த உலகில்
எந்த பெண்ணும் அழகில்லை...!!!
அழகென்பது confidence தான்...!!
அவள்
உலகில்
அவளின் விருப்பமின்றி
எதுவும்
நடக்காது
அதையும் மீறி நடந்தால்
அவற்றை தீ தின்று விடும்...!!!
தனித்து வாழ முடியும்
என்ற
அவளின்
தன்னம்பிக்கை
தீயிலும் வெட்பமானது...!!!
அந்த தீ தான்
இன்று
பல பெண்களின்
வழிக்கு
ஒளியூட்டுகின்றது...!!!
இனியும்
எந்த நாட்குறிப்புகளும்
மறைத்து வைக்கத்
தேவையில்லை...!!!
SathyaPireyan VijayaMaran