எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆன்மீகத் தேடல் !!! கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்...

ஆன்மீகத் தேடல் !!!


கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி , தாராசுரம் அருகே , தாராசுரம் வழி பட்டீஸ்வரம் கோயிலுக்கு போகும் முகப்பில் ஐராதீஸ்வரர் கோயில் பின்புறம் அமைந்து உள்ளது அருள்மிகு பத்ர காளி அம்மன் உடனுறை அருள்மிகு வீர பத்திரர் திருக்கோயில் .

இந்த திருத்தளம் குடந்தையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளது .

நான் நடை பழக்கமாக தினமும் ஐரா தீஸ்வரர் கோயிலுக்கு செல்லுவது வழக்கம் , அவ்வாறு செல்லும் பொழுது இந்த கோயிலை வெளியில் இருந்து பார்த்து இருக்கிறேன் .

கோயில் பழமையானது என்பதற்கு பல அறிகுறிகள் தென்பட்டன.

பாழ் அடைந்த கோபுரம் , ஆனால் சீரடைந்து வருகிறது. இதற்கு காரண கார்த்த அங்கு வசிக்கும் ஒரு பக்தர் .

அவ்வாறாக நான் , ஒரு நாள் காலை சென்ற போது , கோயிலை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது .

பூசாரி அவர் வேலையை பார்த்துக் கொண்டு இருந்தார் . நான் கோயில் மூலவரை வணங்கினேன் . பிறகு பின்புறம் சென்ற போது , என்னை கூப்பிட்டு , அங்கே இருப்பது ஒட்டக்கூத்தர் சமாதி என்றும் , அவர் அங்கே சித்தமாகி இருக்கிறார் என்று கூறினார் .

சித்தர் பீடம் மூலஸ்தானத்தில் இருந்து சற்று தெற்கே அமைந்து உள்ளது. சித்தர் பீடத்தை சுற்றி புது சமாதி அமைத்து இருந்தார்கள் .

கவிச்சக்ரவர்தி , இங்கே அமர்ந்து பல பாடல்களை பாடி இருக்கிறார். அதில் இந்த ஊரைப் பற்றிய குறிப்புகளும் பல உள .

இதில் உள்ள உண்மையை என்னால் உணர முடிந்தது . கால காலமாக தமிழை வளர்த்த புலவர்களுக்கு பொற்குவியலை அரச மாமன்னர்கள் கொடையாக கொடுத்ததும் , மேலும் அருள் வாக்கு பெற்றதும் , அந்த சிந்தனையில் கிடைத்த கருவூலங்கள் நமக்கு புதுப் புது அர்த்தங்களையும் , வாழ்வியலையும் என்றென்றும் பறை சாற்றிக் கொண்டு இருக்கின்றன.

கவியை வணங்கி சற்று முன்னோக்கி நடந்தேன் . அங்கே வடக்கே ஒரு உயர்ந்த புற்றும் , அதைச் சுற்றி ஒரு வளைவான பிரகாரமும் என்னை வரவேற்றன .

சுற்றி வந்து அமர்ந்தேன் . தியாணம் செய்தேன்.

கடைசியாக பூசாரி நீலகண்டனிடம் ( 8680828922) உரையாடினேன் .

அது அகஸ்தியரின் சிஸ்யர் ஸ்ரீ ரெவன சித்தர் அடக்க மாகிய இடம் என்று கூறினார் .

பிரமிப்புடன் சென்ற எனக்கு பல கேள்விகள் எழுந்தன . எல்லாவற்றிற்கும் ஆன பதிலை அவரிடன் தேடிக் கொண்டேன்.

இந்த கோயிலைப் பற்றி என்ன எழுதுவது என்ற எண்ணம் உதித்த பொழுது என்னிடம் எந்த குறிப்பேடும் இல்லை.

இப்படி சொல்ல எனக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதற்கு பிறகு நடந்த ஒரு சம்பவம் .

பூசாரியை சந்தித்தேன் . உரையாடினேன் . விடை பெற்றேன் . அவர் அங்கு உள்ள கலசத்கிற்கு வர்ணம் இட பணம் தேவைப் படுகிறது என்று கூறினார் . என் மனதில் அதை உள் வாங்கிக் கொண்டேன் .

எப்படி என் எண்ணங்களை பகிர்வது என்று நினைக்கும் பொழுது என் பார்வை விரிய வில்லை .

ஆனால் அந்த எண்ணம் மட்டும் என் இதயத்தை சற்று உருத்திக் கொண்டே இருந்தது என்று தான் சொல்ல வேண்டும் .

நான் பார்த்தேன் , ஆனால் புரிதல் இல்லை .

புரிதலுக்கு தேடுதல் அவசியம் என்பது மட்டும் என் எண்ண ஓட்டமாக இருந்தது.

ஓட்டத்தை முன் நிறுத்தினேன் . எண்ணங்கள் குவியலாகின.

குவியலை சரி செய்தேன் . சரி செய்ததின் விளைவு நான் உங்களிடம் பகிர்ந்து கொண்டு இருக்கிறேன் .

விளைவை நோக்கிய பயணம் தொடரும் ......,,,,


நாள் : 1-Aug-22, 12:20 pm

மேலே