எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

#உன்னை போல்.....* படைப்பு *கவிதை ரசிகன்* #குமரேசன் பத்து...

#உன்னை போல்.....*

படைப்பு *கவிதை ரசிகன்*
#குமரேசன்

பத்து பேர் நடுவில்
உன்னை
ஒருவர்
கேலி கிண்டல்
செய்யும்போது.....
உன் மனம்
எவ்வளவு
வேதனைப்பட்டது என்பதை
உணர்ந்த பிறகும்
இன்னொருவரை
கேலிக்கிண்டல்
செய்யலாமா....?

ஒருவர்
உன்னிடம்
சொன்னபடி
நடந்து கொள்ளாத போது
உனக்கு
எவ்வளவு
கோபம் வந்தது என்பதை
உணர்ந்த பிறகும் ....
நீ சொன்னபடி
நடந்து கொள்ளாமல்
இருக்கலாமா ....?

ஒருவர்
உன் மீது
பொறாமைப்படுவது
தெரிய வந்தபோது
உனக்கு
எவ்வளவு
வெறுப்பு வந்தது என்பதை
உணர்ந்த பிறகும்....
நீ அடுத்தவர் மீது
பொறாமை படலாமா ?

ஒருவர் உன் மனம்
புண்படும்படி பேசிய போது
உனக்கு
எவ்வளவு
வலியாக இருந்தது என்பதை
உணர்ந்த பிறகும்....
நீ அடுத்துவர் மனம்
புண்படும்படி பேசலாமா ?

ஒருவர்
உன்னை
அடிக்கடி திட்டும்போது
அவர் மீது எவ்வளவு
வருத்தம் வந்தது
என்பதை நீ
உணர்ந்த பிறகும்
நீ அடுத்தவரை
அடிக்கடி திட்டலாமா....?

உன்னைப்போல்
நீ ஒவ்வொருவரையும்
நேசிக்கும் போது
இறைவன்
உன்னை நேசிப்பார்......

*கவிதை ரசிகன்*

❓❓❓❓❓❓❓❓❓❓❓

நாள் : 23-Feb-23, 4:39 pm

மேலே