ரசூல் கம்சடோவ் இத்தாலி நகரில் ஒரு டாகெஸ்தான் பிரஜை...
ரசூல் கம்சடோவ் இத்தாலி நகரில் ஒரு டாகெஸ்தான் பிரஜை ஒருவரைச் சந்தித்தாராம். இந்தச் சந்திப்புக் குறித்து டாகெஸ்தான் சென்றபொழுது அந்தப் பிரஜையின் அன்னையிடம் தெரிவிக்கையில், அன்னை முதலாய்க் கேட்ட கேள்வி “என் மகன் அவார் மொழியில் பேசினானா?” என்பதாம். ”இல்லையம்மா, அவர் ஃப்ரென்ச் மொழியில் பேசினார், அதற்கான காரணம்தான் விளங்கவில்லை” என்று இவர் விடையளித்ததைக் கேட்டது, அன்னை தான் போட்டிருந்த துணியை எடுத்துத் தலையில் அணிந்து கொண்டாராம். அந்த கலாச்சாரத்தின் வழக்கத்தில் ஒருவர் இறந்து விட்டால் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தலையில் துணியை அணிந்து கொள்வார்களாம். அதாவது, அந்த அன்னை தன் மகன் தனது மொழியில் பேசவில்லை என்றதும் அவனை இறந்தவனாகக் கருதினாளாம். அந்த தாய்க்கு தன் மொழிமேல் எவ்வளவு பற்று இருந்திருக்க வேண்டும். என்பதைக் கவிஞர் விளக்கக் கேட்ட நமக்கு மயிர்க் கூச்செறிந்தது.