விஜயசேதுபதியின் பாசறைக்குள் புதிதாக பிந்து மாதவி கழுகு, கேடி...
விஜயசேதுபதியின் பாசறைக்குள் புதிதாக பிந்து மாதவி
கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களில் நடித்த பிந்து மாதவி, சிவகார்த்திகேயனுடன் கிசுகிசுக்கப்பட்டபோது ஓரளவு பரபரப்பாக பேசப்பட்டார். ஆனால், இந்த சேதி அடங்கியதும் பிந்த மாதவியும் காணாமல் போய்விட்டார். அதோடு அதற்கடுத்து அவர் நடித்து வெளியான ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் படமும் தோல்வியடைந்ததால் அடுத்தபடியாக தமிழில் அவரது எதிர்காலம கேள்விக்குறியாகி நின்றது.
இந்த நேரத்தில் விமல், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களும் இவரை கழட்டி விட்டதால், அடுத்து எந்த நடிகரை பிடிக்கலாம் என்று நோட்டம் பார்த்த பிந்துமாதவிக்கு விஜயசேதுபதி சிக்கினார். அவர் படங்களில் நடிக்கிற எல்லா நடிகைகளுமே தன்னை விட சிறிய கதாநாயகிகள்தான் என்பதால் சிறிய முயற்சி மூலமே அடுத்து அவர் நடிக்கயிருககும வசந்தகுமரன் படத்தை கைப்பற்றி விட்டார் பிந்து.
ஆனால், இப்போது விஜயசேதுபதியின் பாசறைக்குள் புதிதாக பிந்து மாதவி வந்திருப்பதால், அவரது ஆஸ்தான நடிகைகளான ஐஸ்வர்யா, காயத்ரி, நந்திதா உளளிட்ட நடிகைகள் எங்கு தங்களுக்கு அவ்வப்போது அவருடன் நடிக்கிற வாய்ப்பும் பறிபோய் விடுமோ என்று அச்சத்தில் உள்ளனர்.