எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எளியவனாய் வறுமையில் பக்குவப்பட்டு.. கைசேரும் செல்வம்தனை செவ்வுடனே தக்கவைத்துகொள்ளுவது...

எளியவனாய்
வறுமையில்
பக்குவப்பட்டு..
கைசேரும்
செல்வம்தனை
செவ்வுடனே
தக்கவைத்துகொள்ளுவது
நாளைய மழைக்கு
நேற்றே பாத்திகட்டுவதாகும்.
....ஆனால்....
செழுமை எனும்
உழைப்பறியா
சொகுசுதனில்
ஆடம்பரமாய்
வாழும் நாளில்
உடன் சேர்ந்து
வறுமை வருவது......
நேற்றைய மழைக்கு
இன்று குடைபிடிப்பது போன்றாகும்.
...புரிந்துகொள்வோம்..
கற்றதை பாடம்
என்பின்
பெற்றது அறிவு..!!
நல்லதை கற்று
மறப்பின்
பெறுவது அழிவு..!!
...கவிபாரதி...

பதிவு : கவிபாரதி
நாள் : 19-Jun-14, 2:29 am

மேலே