எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காதலி நலமா??? எனக்காக தினமும் எட்டிப் பார்க்கும் உன்...

காதலி
நலமா???

எனக்காக தினமும் எட்டிப் பார்க்கும் உன் எதிர்ப்பார்ப்பு நலமா?
உன் நினைவில் வாழும் என் பொழுதும் கனவும் நலம்

நீ என்னை முதன் முதலில் திட்டிய கெட்ட வார்த்தை நலம்
நான் முதன் முதலாய் உன்னை கொஞ்சிய வார்த்தை நலமா?

இன்னும் என்னை இம்சித்துகொண்டிருக்கும் உன் நினைவுகள் நலம்
என்னை பார்த்ததும் சிவக்கும் வெட்கங்கள் நலமா?

ஒப்பனை இல்லா ஓவியமே
உன்னை என்று காண்பேனோ தெரியவில்லை
சிலவற்றிற்கு விடை தெரியாமல் இருப்பது தான் நாகரிகம்
இதில் எதை சொல்வது

என் வீட்டு முற்றத்தை அலங்கரிக்க ஒருத்தி வேண்டுமாம்
அவள் நீ என்றாள் மக்கிய சிந்தனையில் என்னை தினமும் நிந்திக்கிறார்கள்
அவர்களுக்கு இன்னும் புரியவில்லை
நாம் என்று பார்த்தோமோ அன்றே நாம் உடல் மறந்து வாழும் ஒரு உயிர்கள் என்று

இந்த கடிதம் இக்கொடிய பிரிவுக்காலத்திற்கு பதில் சொல்கிறது
நம் காதலுக்கு அல்ல

நம் பிரிவின் காரணமாக
உன் ரோஜா இதல் வாடிவிடப் போகிறது-இந்த
கடிதத்தில் என் ஈரப் பசையை
கூடுதலாக அனுப்புகிறேன்

உன் உடல் மெலிந்து விடப்போகிறது
உன்னிடம் அனுப்புகிறேன் என் ஆரோக்கியமான வார்த்தைகளை

பௌர்ணமியே கேள்- வருந்தாதே
உனக்காக நான் மாற்றங்களை ஜீவித்துக் கொண்டு இருக்கிறேன்

ஒரு வீட்டில் உடல் உரச வாழ்ந்தால் தான் வாழ்க்கையா?
இருவேறு திசைகளில் மனம் மகிழ வாழ்ந்தால் பிரிவு ஒன்றும் இல்லை

இவ்வாறே தொடர்வோம் நம் காதல் விரதத்தை
பட்டினி நம் உருவங்களுக்கு மட்டுமே
சுவைத்து கொள்ள ஞாபகம் என்றுமே இருக்கிறது
கலங்காதே கண்மனி

உன் கண்களில் இருந்து வடிந்து கொண்டிருக்கும்
ஒவ்வொரு துளியிலும்
என் உயிர் கலந்து இருக்கிறது
மறந்தும் உதிர்த்து விடாதே

காதலுடன் காதலன் !!!




பதிவு : nithyanithu
நாள் : 29-Nov-13, 11:18 am

மேலே