எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இரட்டைப் புலவர்கள் இரட்டைப்புலவர் அல்லது இரட்டையர் எனப்படுவோர் கிபி...

இரட்டைப் புலவர்கள்

இரட்டைப்புலவர் அல்லது இரட்டையர் எனப்படுவோர் கிபி 14ம் நூற்றாண்டு காலப் பகுதியில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள். இளஞ்சூரியர் - முதுசூரியர் என்ற இவர்களில் ஒருவருக்கு பார்வை கிடையாது என்றும், மற்றொருவருக்கு கால்கள் கிடையாது . இவர்களில் கால் இல்லாதவரை பார்வை இழந்தவர் தனது தோள்களில் சுமந்து நடப்பார் கால் இல்லாதவர் அவருக்கு வழி நடத்தி செல்வார். இவர்கள் சிலேடையாகப் பாடுவதில் வல்லவராவர்.
இவர்களின் வெண்பாக்களில் முதல் இரு அடிகளை முதலாமவர் சொல்ல, ஈற்றடிகளிரண்டையும் பின்னவர் முடிப்பார்.
ஏழ்மையில் வாடிய அவ்விருவருக்கும் உடுத்த துணி ஒன்று.மாற்று துணி ஒன்று தான். அவ்விரண்டுமே கந்தல் வேறு. ஒருமுறை அவ்விருவரும் மதுரையம்பதிக்கு விஜயம் செய்தனர்.

வைகையில் துணிகளை அலசி, நீராடி விட்டு, சொக்கலிங்க கடவுளையும் , மீனாட்சி அம்மனையும் சந்திக்க உத்தேசப்பட்டு, ஆற்றில் இறங்கினர். பார்வையற்றவர் துணிகளைத் துவைக்க, கால்களற்றவர் கரைமேல் அமர்ந்து கொண்டிருந்தார்.
வைகையின் வெள்ள மிகுதியால், துவைக்கப்பட்டு கல்லின் மேல் வைக்கப்பட்டிருந்த வேட்டியானது நீரினால் அடித்துச்செல்லப்பட்டது. நடப்பதேதும் அறியாத பார்வையற்றவர் மற்றொரு துணியை துவைத்துக்கொண்டிருக்க, நீரினால் அடித்துச்செல்லப்பட்ட வேட்டியை தண்ணீரில் இறங்கி பிடிக்க முடியாத கால்களற்றவர் பாடுகிறார் :

"அப்பிலே துவைத்து அடுத்தடுத்து அதைநீர்
தப்பினால் நம்மை யது - தப்பாதோ"

என வெண்பாவின் முதல் இரு அடிகளை சொன்னார்.

[பொருள் : திரும்ப திரும்ப அந்த கந்தல் துணியை அடித்து துவைத்தால் - (பாவம்! அந்த துணி விட்டா போதுண்டாசாமி-ன்னு) நம்மை விட்டு விலகிச்சென்றுவிடாதோ!]

இதைக் கேட்ட அந்தகர் பாடுகிறார்

- செப்பக் கேள்‘ஆனாலும் கந்தை, அதிலுமோர் ஆயிரங்கண்
போனால் துயர் போச்சுப்போ’

(“கந்தல் துணி - ஆயிரம் ஓட்டை - போனால் போகட்டும் நம்மை பிடிச்ச துன்பம் போச்சு போ” என்று. )

முடவர் விடவில்லை பாடுகிறார்
கண்ணாயிரமுடைய கந்தையேயானாலும்
தண்ணார் குளிரையுடன் தாங்காதோ?’

(அது எத்தனை கந்தையானாலும் இரவிலே குளிருக்கு ஆகுமே)


பார்வையில்லாதவர் இப்போது வெண்பாவை எப்படி முடிக்கிறார் :

"இக்கலிங்கம் போனாலென்ன எகலிங்க மாமதுரை
சொக்கலிங்கம் உண்டே துணை".

[பொருள் : கலிங்கம் - ஆடை சொக்கலிங்கமுண்டு - முண்டு என்றால் துண்டு;
இன்னொன்று மதுரை ஆண்டவன் துணை உண்டு என்று).
இந்த துணி போனா போகட்டும் நமக்கு துணையாத்தான் சொக்கர் இருக்காரே!! -என)
அப்பொழுது துணி அலையில் தவிழ்ந்து அவர் கைக்கு வர, இருவரும் கரையேறுகின்றனர்.

தமிழுடனே பக்தியும் இணையும் பொழுதல்லவோ பரவசநிலை!

பதிவு : சிவநாதன்
நாள் : 26-Jun-14, 10:05 pm

மேலே