எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

செலிபிரட்டி பேட்மிண்டன் மேட்ச் சினிமா நட்சத்திரங்கள் சார்பில் கடந்த...

செலிபிரட்டி பேட்மிண்டன் மேட்ச்

சினிமா நட்சத்திரங்கள் சார்பில் கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு மாநிலங்களைச்சேர்ந்த நடிகர்களுக்குமிடையே கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு பெற்றிருப்பதால், இப்போது பேட்மிண்டன் விளையாட்டு போட்டிகளை தமிழக நடிகர்-நடிகைகளை வைத்து நடத்த இந்தியன் பேட்மிண்டன் செலிபிரட்டி அமைப்பு களமிறங்கியுள்ளது.

இந்த போட்டிக்கான தொடக்க விழா ஜூலை மாதம் 8-ந்தேதி நடைபெற உள்ளது. அதையடுத்து பயிற்சிகள் நடத்தப்பட்டு ஜூலை 9, 10 தேதிகளில் போட்டிகள் நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதுபற்றிய அறிவிப்பினை அவர்கள் வெளியிட்டதுமே கோலிவுட்டின் பல நடிகர்கள் முந்திக்கொண்டு தங்களது பெயர்களை பதிவு செய்து வருகிறார்கள்.அந்த வகையில், ஜெயம்ரவி, ஆர்யா, பரத், சிவா, ஜெய், ஆரி, நரேன். எஸ்.எஸ்.பி.சரண், கிருஷ்ணா, ஆதி, உதய், சுந்தர்.சி, வெங்கட்பிரபு, பிரேம்ஜி, ஆதி ஆகிய நடிகர்களும், அமலாபால், ஓவியா, லட்சுமிராய், ஜனனி அய்யர், ரூபா மஞ்சரி ஆகிய நடிகைகளும தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர்.. இவர்கள் தவிர இன்னும் பலர் கலந்து கொள்ள தயாராகிக் கொண்டிருக்கிறார்களாம்.

நாள் : 27-Jun-14, 4:12 pm

மேலே