எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாழ பழகு!!!! பொம்மையில் மறைத்த பஞ்சுதான், இந்த போலியான...

வாழ பழகு!!!!

பொம்மையில் மறைத்த பஞ்சுதான்,
இந்த போலியான வாழ்க்கை..!
பகட்டு புகழ்!
பாட்டிலில் உருவான சோப்புகுமிழ் போல்,
எத்தனை நொடிகள் தான் அழகு தரும்..!!

கேலி செய்யும் இந்த உலகத்தில்,
ஈனவும், இழக்கவோ இன்னும் என மீதம் உள்ளது..,
நம் மானிட பிறப்பிற்கு..,

சாணக்கியமில்லா சில சாத்தியகூறுகளை,
சாக்குகளாய் சொல்லவா..,
அந்த பச்சை உடம்பு கதற கதற,
இரக்கமிலாமல் ஈன்றவள், சதை கிழித்தோம்,..!!

"நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்றால்"
குருதி வடியவடிய தொப்புள்குடி அறுத்தபோது,
ஒரு சூடு கண்டோமே!!? சொரணை இல்லையா??
இருந்தும் ஏன் இன்னும் இந்த தவிப்பு?
பழமொழி மாட்டுக்கு மட்டும் தானோ??

முதலில் நாம் மனிதன் தான் என்பது நிச்சயமா?
கேட்கிறேன்..!!
சில சிற்றின்பதிற்காக..,
முதல் மொட்டைக்கு முன்,
தலைமுடி சிக்கடுத்த ஒருத்தி..!
சீக்கு வந்து கிடப்பதை கவனிக்க தவறி,
கடல் கடந்து சென்றவனை கேட்கிறேன்..!

தான் கண்முன் உயிர் போவது தெரிந்தும்,
அதை மண்ணில் திரித்த கயிறாய் நினைக்கும்,
மானங்கெட்ட மயிறுகளை கேட்கிறேன்..!

இன்னொரு புறம்,
அரசாங்க ஊதியமாம்..!
"அரசு" என்ற பெயரை மாற்றினால் என்ன??
கதியத்த மக்கள் தனக்கு சேர வேண்டிய பணத்தை,
பிச்சையாய் வாங்க..,
சில கரட்டாவண்டிகளுக்கு, கமிசனாய்..,
சிரிச்ச காந்தியின் மூஞ்சியில்
காரி துப்பி கொடுக்கவேண்டியுள்ளது..,!
அவர்களை கேட்கிறேன்..!

அடிமாட்டு பால் குடித்தால் கூட,
ஆறாவது அறிவு இருக்குமே...!
நாமெல்லாம் எப்போது மனிதனாக போகிறோம்..!

பதிவு : a.vignesh
நாள் : 27-Jun-14, 7:28 pm

மேலே