எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கச் செய்யும் உணவுகளைப்பற்றி விவரிக்கிறார்...

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கச் செய்யும் உணவுகளைப்பற்றி விவரிக்கிறார் சீஃப் டயட் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி.

''மேலை நாடுகளில் மட்டுமே அதிகம் இருந்த புற்றுநோய்கள் இப்போது இந்தியாவில் பெருகிவருகின்றன. வெளிநாட்டினர் காய்கறி, கீரைகள், தானியங்கள் கொண்ட சாலட் வகை சத்தான உணவை அன்றாடம் எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், இங்கோ பர்கர், பீட்சா, ஜங்க் ஃபுட்ஸ் என நார்ச் சத்து இல்லாத கடின உணவுகளையே விரும்பிச் சாப்பிடுகின்றனர். அதிலும், பெரும்பாலான கடைகளில், காய்ந்த சிவப்பு மிளகாய் வற்றலை அரைத்துத் தூவிப் பயன்படுத்துவதால், நேரடியாக புற்றுநோய்க்கு சிவப்புக் கம்பளமிட்டு வரவேற்கிறோம். மேலும் கோஸ், பீன்ஸ், கேரட் பொரியலில்கூட வெள்ளையாகவும், பச்சை நிறம் மாறாமலும் இருக்க வேண்டும் என்பதற்காக மஞ்சள் சேர்ப்பது இல்லை. உடல்நலத்துக்குக் கேடுவிளைவிக்கும், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட் உணவுகளை அதிகம் பயன்படுத்துகிறோம். இது உடல் நலத்துக்கு மிகவும் கேடு விளைவிக்கக்கூடியது. இவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

பருப்பை வேகவிடும்போது, சிட்டிகை மஞ்சள்தூள், ஒரு டீஸ்பூன் வெந்தயம், சிறிது மிளகு, சீரகம் சேர்த்தே வேகவிடலாம். இதனால் ஒருநாள் வரை பருப்பு கெடாமல் இருக்கும். உடலில் சத்துக்களும் சேரும். காய்கறிகள், கூட்டு, சாம்பார் என எல்லாவற்றிலும் மஞ்சள்தூளைச் சேருங்கள்.

நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு நார்ச் சத்து 20 முதல் 40 கிராம் தேவை. பழங்கள், காய்கறிகள், முழுதானியங்கள் அன்றாடம் சாப்பிடுவதன் மூலம், 'இன்டஸ்டினல் கேன்சர்’ வராமல் தடுக்கலாம்.

உணவில் தினமும் இரண்டு மூன்று வகைத் தானியங்கள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

மூன்று நான்கு வகை வெவ்வேறு நிறப் பழங்களை தினமும் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

பிங்க் கலர் முட்டைக்கோஸ், வெள்ளை நிற வெங்காயம் மிகவும் நல்லது. தினமும் உணவில் வெங்காயம் சேருங்கள். கோஸை பொரியலாகவோ கூட்டாகவோ செய்து சாப்பிடலாம்.

தினமும் தக்காளி சேர்த்து ரசம், சாம்பார் செய்யுங்கள். தக்காளித் தொக்காகவும் செய்து சாதத்துடன் சாப்பிடலாம்.

காரம் தேவையெனில் மிளகாய் சேர்ப்பதைத் தவிர்த்து, மிளகு சேர்த்துக்கொள்ளலாம். உடலுக்கும் நல்லது.

பதிவு : பசப்பி
நாள் : 8-Jul-14, 2:26 pm

மேலே