எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ராஜீவ் கொலை கைதிகள் வாழ்க்கை சினிமா படமாகிறது முருகன்,...

ராஜீவ் கொலை கைதிகள் வாழ்க்கை சினிமா படமாகிறது

முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரின் வாழ்க்கையும் சினிமா படமாகிறது. இதற்கு வாய்மை என பெயரிட்டுள்ளனர்.

இதில் முருகன் வேடத்தில் டைரக்டர் பாரதிராஜா மகன் மனோஜ் நடிக்கிறார். பேரறிவாளன் வேடத்தில் டைரக்டர் பாக்யராஜ் மகன் சாந்தனுவும், சாந்தன் வேடத்தில் டைரக்டர் பாண்டியராஜன் மகன் ப்ரித்வியும் நடிக்கின்றனர்.

பேரறிவாளன் விடுதலைக்காக போராடும் அவரது தாயார் அற்புதம் அம்மாள் வேடத்தில் பூர்ணிமா பாக்யராஜ் நடிக்கிறார். கவுண்டமணியும் முக்கிய கேரக்டரில் வருகிறார். இப்படத்தை செந்தில்குமார் இயக்குகிறார்.

"தூக்கு தண்டனையை எதிர்த்து போராடும் ஒரு தாயின் கதையே இப்படம். பேரறிவாளன் அற்புதம்மாள் இருவரிடமும் பேசி அனுமதி வாங்கிவிட்டேன். மரண தண்டனைக்கு எதிரான போராட்டத்தை ஊக்குவிப்பது போல் படம் இருக்கும். இதில் அரசியல் இருக்காது. ராஜீவ் படுகொலை பற்றிய காட்சியும் இருக்காது. மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுக்கும் கேரக்டரில் கவுண்டமணி வருகிறார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா அற்புதம்மாள் முன்னிலையில் நடைபெறும். " இவ்வாறு செந்தில்குமார் கூறினார்.

நாள் : 11-Jul-14, 5:11 pm

மேலே